Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலாசார சீரழிவு 90 எம்எல் : ஓவியா ஆர்மியை காலி பண்ணிய ஓவியா

02 மார், 2019 - 19:02 IST
எழுத்தின் அளவு:
90ML-is-Cultural-degradation

நடிகை ஓவியாவுக்கு படங்களில் நடித்தபோது கிடைக்காத பெயர், புகழ் பிக்பாஸ் என்ற ஒரே நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. அவருக்கு ஆர்மி உருவாக்கும் அளவுக்கு ரசிகர்கள் சென்றனர். எங்கு சென்றாலும் அவரை கொண்டாடினர். இந்த பெயரை 90 எம்எல் என்ற ஒரே படத்தில் மூலம் காலி செய்துவிட்டார் ஓவியா.

அனிதா உதீப் என்ற பெண் இயக்குநர் இயக்கிய இப்படத்தின் டிரைலர் வெளியானபோதே அவர் மீது நெகட்டிவ் இமேஜ் விழுந்தது. இயக்குநரும், ஓவியாவும் டிரைலர் பார்த்து படத்தை முடிவு பண்ணாதீர்கள் என மாறி மாறி கூறினர். இது பெண்களுக்கான படம் என வக்காலத்து வாங்கினர்.

படம் வெளிவந்த பின்னர் சமுக வலைதளங்களில் இருவரையும் ரசிகர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். படம் முழுக்க ஓவியா புகைப்பிடிப்பது, சரக்கடிப்பது, கஞ்சா அடிப்பது, அளவுக்கு மீறிய உதட்டு முத்தக்காட்சி, ஐந்து பெண்களுடன் சேர்ந்து, கணவன் - மனைவிக்கு இடையே நடக்கும் அந்தரங்க விஷயங்களை வெட்ட வெளிச்சமாக பேசுவது, இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவது என ஆபாசம் நிறைந்து காணப்படுகிறது.

ஒரு பெண் இயக்குநரின் படமா இது என்று முகம் சுளிக்கும் அளவு கலாச்சார சீரழிவு தான் இந்த படம் என தாரளமாக சொல்லலாம். ஏற்கனவே ஹரஹர மஹாதேகவி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்கள் வெளிவரும் நிலையில் அதையும் மிஞ்சி இப்படி ஒரு படம் வெளியாகி இருக்கிறது.

இது போன்ற படங்கள் தொடர்ந்து வந்தால் இளைய சமுதாயமே பாதிக்கப்படும் என்பது நிதர்சனம். பெண்கள் விருப்பப்பட்ட வாழ்க்கை வாழ வேண்டும் என்று சொல்லி, இதுபோன்று படம் எடுத்து பெண்களின் வாழ்க்கையை வீணடிக்க வேண்டாமே.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
சந்தானம் - அக்யூஸ்ட் நம்பர் 1சந்தானம் - அக்யூஸ்ட் நம்பர் 1 புழல் சிறையில் கமர்கட்டு இயக்குநர்! புழல் சிறையில் கமர்கட்டு இயக்குநர்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

PANDA PANDI - Aththipatti,இந்தியா
08 மார், 2019 - 13:52 Report Abuse
PANDA PANDI தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் ஓவிய.இது அந்நிய நாட்டின் சதியாக இருக்குமோ என்று அர்ஜுன் சம்பத் அவர்கக்ளுக்கு டௌட் வர வாய்ப்பு இருக்கு
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
04 மார், 2019 - 16:48 Report Abuse
Endrum Indian 1) நடிகை எனபவள் "தோல் காமி பணம் பண்ணு" தொழில் துறையில் பனி புரிபவள், ஆகவே அவள் புத்தி இப்படித்தான் போகும் என்று காண்பிக்கிறார்கள். 2) அறிவு பிறழ்ந்த பெண் சமூக ஆர்வலர்கள், ஆணும் பெண்ணும் சரி சமம் என்று சொல்லிக்கொள்வதால் இப்படிக்காட்டுகின்றார்கள், ஆண் மட்டும் தான் இப்படி பண்ணமுடியுமா , ஏன் பெண் பண்ண முடியாதா என்ன என்று காண்பிக்கத்தான் இம்மாதிரி செய்து காண்பிக்கிறார்கள்.
Rate this:
sureshsmart is smart - Coimbatore,இந்தியா
04 மார், 2019 - 14:21 Report Abuse
sureshsmart is smart ஆண்கள் செய்வதையெல்லாம் செய்யும் உரிமை பெண்களுக்கும் உண்டு என்கிறார் இயக்குனர். நாம் கேட்பது, ஏற்கனவே புகைபிடித்துக்கொண்டிருக்கும் அன்பர்களையே எப்படி திருத்துவது என்று தெரியவில்லை. இந்நிலையில், நீங்கள் ஏன் பெண்களுக்கும் புகைக்கும் உரிமை உள்ளது என்று தூண்டிவிடுகிறீர்?
Rate this:
Babu Desikan - Bangalore,இந்தியா
04 மார், 2019 - 12:11 Report Abuse
Babu Desikan தமிழ் நாட்டு மக்களிடம்: பண்பாடு, ஒழுக்கம் பற்றிய மதிப்பு மிகவும் கீழே சென்று விட்டது. நகைச்சுவை என்ற பெயரில் பண்பாட்டு சீரழிவை மிகுந்த அளவில் புகுத்தி விட்டோம். ஒரு படத்தில், ரெண்டு நிமிஷம் லைட்டை ஆப் பண்றேன் என்று சினிமா கொட்டாயில் அறிவுப்பு விடுத்தவுடன் இரு தம்பதியர் மட்டும் அரங்கில் இருக்கின்றனராம்..அவர்களும் பொண்டாட்டி புருஷனை பரிமாற்றம் பண்ணிக்க கொண்டவர்கள் என்று தெரிய வருகிறது. இதை எல்லோரும் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள். இந்த மாதிரி எத்தனையோ தரங்கெட்ட காட்சிகள். விவேக் படங்களில் கள்ள தொடர்பை ஸஹஜாமாக்குவது போல் காட்சிகள். குடிக்காதவனை கேனையன் போல் சித்தரிப்பது, இப்படி எத்தனையோ.
Rate this:
sri - trichy,இந்தியா
04 மார், 2019 - 10:00 Report Abuse
sri ஐயா கலாச்சார கோமான்களே நீங்க மட்டும் டெய்லி சரக்கு அடிப்பீங்களாம் எல்லா படத்துலயும் சரக்கு அதிகாரத்தை காட்டுவீங்களாம் அனா பொண்ணுங்க சரக்கு அடிச்சா ஒங்களுக்கு கலாச்சாரமா. நீங்க கிஸ் அடிபிங்கலம் அதே பொண்ணுங்க அடிச்ச கலாச்சாரம் போய்டுதாம். ஒழுங்கா இருக்கிறவன் மட்டும் கமெண்ட் போடுங்கடா. வீனா பொன்வேங்களே ஒழுங்கா பாத்து ஒட்டு போடுங்கடா. குடிமக்கள் எப்பிடியு அரசனும் அப்பிடியே
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in