Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிள்ளை வளர்ப்புக்கு அஜித் யோசனை

28 பிப், 2019 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Ajiths-ideas-how-to-handle-children

நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, நடிகர் அஜித்தும், அவரது மனைவி நடிகை ஷாலினியும், ஆண்ட்ராய்டு செல்போனைத்தான் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, சாதாரண செல்போனுக்கு மாறி இருக்கின்றனர். இதற்கான காரணத்தைக் கேட்டபோது, எல்லாமே பிள்ளைகளுக்காகத்தான்' என பதில் அளித்திருக்கிறார் அஜித்.

இது தொடர்பாக, அவர் அளித்த கூடுதல் விவரம் வருமாறு:

பிள்ளைகள் கிடுகிடுன்னு வளர்ந்து விட்டனர். அவர்களுடைய வயதுக்கேற்ற வகையில்தான் அவர்களது செயல்பாடுகளும்; தேவைகளும் இருக்கும். நம்முடைய பிள்ளைகள்தான் என்பதற்காக, நம்முடைய விறுப்பு - வெறுப்புக்கெல்லாம் அவர்களை இழுக்க முடியாது. பிள்ளைகளை முழு சுதந்திரமாக விட வேண்டும். அதே நேரம், நம் கண்காணிப்பில் வைத்து வளர்க்க வேண்டும். தேவையில்லாமல், அவர்கள் சுதந்திரத்தில் தலையிட்டு, அவர்களை எரிச்சலாக்கக் கூடாது. அதாவது, அவர்களது எண்ணங்களை ஒரு போதும், வேறுபக்கம் கொண்டு போகும் முயற்சியில் வலுக்கட்டாயமாக இறங்கக் கூடாது.

இது ஒவ்வொரு பெற்றோருக்குமான கடமைதான். அதைத்தான், நானும், ஷாலினியும் எங்கள் பிள்ளைகளிடம் காட்டுகிறோம். அனோஸ்கா - ஆத்விக் இருவரும், வளர்ந்து பெரியவர்களாக ஆகும்போது, செல்போன் டெக்னாலஜி இன்றைய காலகட்டத்தை விட, பல மடங்கு முன்னேறி விடும். அப்போது, அப்படிப்பட்ட போன்களை நாங்களும் வாங்கி பயன்படுத்தினால், அதனால், யாருக்கும் கெடுதல் இல்லை.

இவ்வாறு அஜித் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
என் குடும்பத்தை பாழாக்கிய எஸ்.ஐ., - தாடி பாலாஜி கண்ணீர்என் குடும்பத்தை பாழாக்கிய எஸ்.ஐ., - ... வைரமுத்து விவகாரம்; அமைச்சர் வரை சென்ற சின்மயி வைரமுத்து விவகாரம்; அமைச்சர் வரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

01 மார், 2019 - 12:04 Report Abuse
Prasanna Krishnan Feel proud to be your fan.
Rate this:
prem - hiddi  ( Posted via: Dinamalar Windows App )
28 பிப், 2019 - 17:05 Report Abuse
prem good idea....well defined care tips about the childrens
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in