Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரதமர் அறிவித்த உதவி தொகை : ராஜ்கிரன் ஐயம்

26 பிப், 2019 - 13:50 IST
எழுத்தின் அளவு:
Rajkiran-feel-about-PMs-farmers-amount

இரண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று சொல்லியிருந்த பிரதமர் மோடி, அதற்கான திட்டத்தை, நேற்று, துவங்கி வைதார்.

'இதனால், இந்தியாவில் உள்ள 12 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்' என, உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் நடந்த விழா மூலம் கூறியிருக்கிறார் பிரதமர் மோடி.

'மேலோட்டமாகப் பார்த்தால் இது விவசாயிகளுக்கு ஓரளவு நம்மை தரும் திட்டம்தான். என்றாலும், இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தால் இடைத்தரகர்கள் தான் லாபம் பார்ப்பார்கள்' என, தனது முகநூல் பக்கத்தில் கவலை தெரிவித்திருக்கிறார், நடிகர் ராஜ்கிரண்.

கவலையோடு அவர் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளவை:

மத்திய அரசு, ஏழை விவசாயிகளுக்காக, வருடத்திற்கு ஆறாயிரம் ரூபாய் வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஆறாயிரத்தை, மூன்று தவணைகளாக, தவணைக்கு இரண்டாயிரமாக வழங்கவிருக்கிறது. பசி, பட்டினியால் வாடும் ஏழை விவசாயிகளுக்கு மாதம் ஐநூறு ரூபாய் கிடைப்பது, பொன் வைக்க வேண்டிய தேவையில் இருக்கும் அவர்களுக்கு, பூ வைத்த மாதிரி, நல்ல விசயம் தான்.

ஆனால், இந்த பணத்தை, வங்கிகள் மூலமாக கொடுப்பது என்பது தான், கவலையை உண்டாக்குகிறது! ஏழை விவசாயிகள் அனைவருக்கும் வங்கிப் பரிவர்த்தனை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். எப்போதும், ஒரே மாதிரி கையெழுத்து போட வேண்டும், கொஞ்சம் மாறினாலும், வங்கிகள் பணம் கொடுக்காது.

எல்லாம் சரியாக இருந்தாலும், குறைந்த அளவு பணம் கணக்கில் இருக்க வேண்டும் என்று ஒரு தொகையை வங்கிகள் பிடித்து வைத்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி, ஏழை விவசாயிகளிடம், 'வங்கியிலிருந்து நான் பணம் பெற்றுத் தருகிறேன்' என்று ஒரு தரகர் கூட்டம் கிளம்பி விடும். அவர்களுக்கும் அழுதது போக, ஏழையின் கையில் என்ன மிஞ்சும்? இதையெல்லாம் யோசித்து, அரசு கொடுக்கும் பணம் முழுவதுமாக சேர வேண்டியவர்களுக்கு போய்ச் சேர்வதற்காக, அரசு ஒரு நல்ல வழிகாட்டினால், ஏழை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
நிறைவேறியது சத்யராஜ் மகள் கனவுநிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு விஜய் சேதுபதியுடன் இணையும் நிவேதா விஜய் சேதுபதியுடன் இணையும் நிவேதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

sankar - Nellai,இந்தியா
05 மார், 2019 - 19:10 Report Abuse
sankar கையில காசா கொடுத்தா - கட்சிக்காரங்கதான் சாப்பிடுவாங்க - புரிச்சுக்கோங்க பிரதர்
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
02 மார், 2019 - 07:24 Report Abuse
Subramanian Arunachalam திரு ராஜ் கிரண் ஏதோ மயக்கத்தில் இருந்து எழுந்து பேசுவது போல் உள்ளது . நேரடியாக பணம் கொடுத்தால் தான் பல பேருக்கு அழுதது போக சில ரூபாய்கள் பயனாளிகளின் கையில் இருக்கும் . நேரடியாக கணக்கில் வரவு வைத்தால் வங்கி கணக்கில் முழு பணமும் வரவு வைக்கப்பட்டிருக்கும் . அந்த பயனாளிகளை ஏமாற்றி எ டி எம் அட்டை மூலம் ஆட்டையை போடா ராஜ் கிரண் போன்ற நபர்களால் தான் முடியும் .
Rate this:
vns - Delhi,இந்தியா
01 மார், 2019 - 02:45 Report Abuse
vns ராஜ்கிரண் போன்ற ஷரீயத்தை ஏற்கும் இஸ்லாமியர்கள் வேண்டுமானால் இந்தியா வங்கிகளில் கணக்கு தொடங்காமல் இருக்கலாம் ஆனால் இந்தியா விவசாயிகள் மிகவும் புத்திசாலிகள் அவர்களுக்கு வங்கிகளில் பணப்பரிமாற்றம் செய்ய நன்றாகவே தெரியும் . இந்த இஸ்லாமியர் அவரது வாயை திறந்து தன்னை முட்டாள் என்று காட்டிக்கொள்ள வேண்டாம்
Rate this:
selva kumar - port blair,இந்தியா
28 பிப், 2019 - 17:48 Report Abuse
selva kumar karuththil eduthukkolla kudiya visayamthan ayya
Rate this:
jayaraman - attayampatti,இந்தியா
28 பிப், 2019 - 11:54 Report Abuse
jayaraman திரு ராஜ்கிரண் ஏதாவது கிராமத்தில் ஒரு வங்கி கிளையில் நாள் முழுவதும் அமர்ந்து மக்கள் என்ன செய்கிறார்கள் என பார்க்க வேண்டும்
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in