Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிறைவேறியது சத்யராஜ் மகள் கனவு

26 பிப், 2019 - 13:31 IST
எழுத்தின் அளவு:
Divya-Sathyarajs-dream-comes-true

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தென் இந்தியாவில் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் என்பதும், அவர் லாப நோக்கமின்றி இயங்கி வரும் உலகப் புகழ் தொண்டு நிறுவனமான 'அக்சய பாத்ரா'வின் தூதுவர் என்பதெல்லாம் எல்லோரும் அறிந்ததுதான்.

இந்நிலையில் திவ்யா, கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து, தமிழகத்தின் அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவு வழங்க, அரசும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையை பரிசீலித்த அமைச்சர், அதற்கு அனுமதியும் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து 'அக்சய பாத்ரா' தொண்டு நிறுவனமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து, இன்று முதல், பள்ளி குழந்தைகளுக்கு, காலை உணவு வழங்குகின்றன. இதன் துவக்க விழாவை இன்று, சென்னை திருவான்மியூர் அரசு பள்ளியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

பொதுவாக அனைவருக்கும் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது, குறிப்பாக, குழந்தைகளுக்கு காலை உணவு ஆரோக்கியமானதாக இருந்தால்தான், அன்றைய நாள் முழுவதும், அவர்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்பதே திவ்யாவின் கனவாக இருந்தது. திவ்யாவின் இந்த கனவு, நிறைவேறியுள்ளது.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
தமிழக வீரர் குடும்பத்துக்கு ஹரிஷ் உதவிதமிழக வீரர் குடும்பத்துக்கு ஹரிஷ் ... பிரதமர் அறிவித்த உதவி தொகை : ராஜ்கிரன் ஐயம் பிரதமர் அறிவித்த உதவி தொகை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02 மார், 2019 - 09:02 Report Abuse
 nicolethomson ஒரு சிலர் போல வெட்டியாய் பேசிகொண்டிராமல் நல்ல விஷயத்தை செய்துள்ளீர்கள், வாழ்த்துக்கள், மொழி ஏதுவானால் என்ன வயிறையும் , பசியையும் ஒரு காலத்துக்கு மேல் மறைக்க இயலாது , இதை புரிந்து அக்சயபாத்திரம் என்று இறங்கியுள்ளீர்களே, நீங்க தான் நீண்ட காலம் வாழவேண்டும்
Rate this:
Suguna - Chennai,இந்தியா
28 பிப், 2019 - 09:43 Report Abuse
Suguna அக்ஷய பாத்திரம் நம் தமிழ் மணிமேகலை என்ற காப்பியத்தில் மணிமேகலையின் கையில் இருக்கும் ஒரு பாத்திரம். எப்போதும் வற்றாமல் உணவு அளிக்கும் பாத்திரம் அது. அது ஒன்றும் சமஸ்க்ரித வார்த்தை அல்ல
Rate this:
tamilselvan - chennai,இந்தியா
27 பிப், 2019 - 14:33 Report Abuse
tamilselvan திரு திவ்யா அவர்கள் வாழ்த்துக்கள்
Rate this:
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27 பிப், 2019 - 08:20 Report Abuse
மனிதன் வாழ்த்துக்கள் தோழி குழந்தைகளுக்கான எந்த நல்ல திட்டமும் வரவேற்கவேண்டியதே அதுவும் இப்போது இருக்கும் அரசில் நல்ல முற்போக்கு சிந்தனையும் மாறுபட்ட செயலிலும் திரு செங்கோட்டையன் நடவடிக்கைகளுடன் செய்வதால் இருவரும் வருங்கால தூண்களுக்கு நல்லது செய்வது ஒரு தலைமுறையை நல்ல ஆரோக்கியத்துடன் வளர்க்கபோறீர்கள் வாழ்த்துக்கள் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்த
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
27 பிப், 2019 - 06:52 Report Abuse
Nellai Ravi இந்துத்துவ இயக்கத்துடன் கைகோத்திருக்கிறீர்கள். ஒங்கப்பாக்கு தெரியுமா ? நம்ம தலைவரெலாம் வீட்ல ஒரு பேச்சு வெளில ஒரு பேச்சு தானே
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in