Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி எதை விரும்புகிறார்?: ரகசியம் உடைக்கும் இயக்குநர்

11 பிப், 2019 - 12:37 IST
எழுத்தின் அளவு:
What-rajini-likes.?

கடந்த மாதம் 10ல் பொங்கல் ரிலீசாக வெளியான ரஜினியின் பிரம்மாண்ட படமான பேட்ட படத்தை இயக்கியவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதற்கு முன், அவர் ரஜினியை வைத்து இயக்கியதில்லை. இதனால், ரஜினியின் நடிப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்? என்ற கேள்வியை, கார்த்திக் சுப்புராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டு வருகின்றனர்.

இதே கேள்வியை சமீபத்தில் தனியார் டி.வி., ஒன்றுக்கு கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்த போதும் கேட்டனர். அதற்கு கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:

ரஜினி, காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மிகவும் ரசித்து நடிக்கிறார். இதுபோன்ற காட்சிகளில் அவர் நடிப்பும், எனர்ஜி லெவலும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. அவர் காமெடி - ரொமான்ஸ் திரைப்படங்களில் நடிப்பதை அதிகம் விரும்புகிறார். இதை அவரிடம் பழகி, பேசியதில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். காட்சிகளை விளக்கும் போது, கூர்ந்து கவனித்துக் கொள்கிறார். அதை அப்படியே தனக்குள் கற்பனையாக யோசித்துப் பார்க்கிறார். பின், கேமரா முன் நடிக்க வருகிறார். இதனால், பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் முடித்து விடுகிறார். அவர், அதைத்தான் விரும்புகிறார்.

தேவையில்லாமல், நடிப்பு என்ற பெயரில், நேரத்தையும், பலருடைய உழைப்பையும் அவர் வீணடிக்க விரும்புவதில்லை. எதை செய்கிறோமோ, அதை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பது ரஜினியின் இயல்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை, ரஜினி ஒரு சிறந்த நடிகர்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் அரசியல்விஜய் ஆண்டனியும் களம் இறங்கும் ... பேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் கொண்டாடிய தயாரிப்பாளர் பேரன்பு வெற்றியை மம்முட்டியுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
11 பிப், 2019 - 19:50 Report Abuse
KayD ரஜினி என்ன விருப்புகிறார் என்று சொல்லுவதை விட avarai rasitha avar abimaanigalae avarai ippadi paaka virubavillai nu ranjniku theriyumaa . ellam superstardom seira padhavi veri ..
Rate this:
Loganathan Palani - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
11 பிப், 2019 - 15:21 Report Abuse
Loganathan Palani Thalaiver always great
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Lockup
  • லாக்அப்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : வாணி போஜன்
  • இயக்குனர் :சார்லஸ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in