Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.ஆர்.ரகுமான் அழைத்தும் போகாத பார்த்திபன்

03 பிப், 2019 - 19:06 IST
எழுத்தின் அளவு:
parthiban-not-attend-ilayaraja-function

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக இளையராஜாவின் 75வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக இளையராஜா 75 என்ற நிகழ்ச்சி நேற்று, இன்று என இரண்டு நாட்களாக நடக்கிறது.

பல சர்ச்சைகள், நீதிமன்ற வழக்குகள் எனக் கடந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் கடைசி சர்ச்சையாக தயாரிப்பாளர் சங்கத்தில் சமீபத்தில் துணைத் தலைவர் ஆக பதவியேற்ற பார்த்திபன் ராஜினாமா செய்தது அமைந்தது.


இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக பார்த்திபன் பல புதுமையான விஷயங்களை செய்ய நினைத்ததாகவும், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க அவருடைய பாணியில் வித்தியாசமான விதத்தில் தொகுப்புரையை எழுதியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அவர் செய்ய நினைத்தவற்றை சங்க நிர்வாகிகள், விழாக் குழுவினர் சிலர் செய்யவிடவில்லை எனத் தெரிகிறது.


கடந்த இரண்டு நாட்களாகவே மற்றவர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத விதத்தில் டுவீட்டிகளைப் போட்டு வருகிறார் பார்த்திபன். அவருடைய ராஜினாமா பற்றி சமசரசம் பேசப்பட்டதாகவும் அதைப் பார்த்திபன் ஏற்க மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். நிகழ்ச்சிக்கு பார்த்திபன் வந்தால் அவர் சமரசம் ஆகிவிட்டார், வரவில்லை என்றால் அவருடைய ராஜினாமா உறுதி என்றே பேசப்பட்டது.


அதே சமயம், நேற்றைய விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணமே பார்த்திபன் தான் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.


நேற்று, ரகுமானை அவரது வீட்டிற்குச் சென்று பூங்கொத்து கொடுத்து விழாவிற்கு வழியனுப்பி வைத்திருக்கிறார் பார்த்திபன். அப்போது பார்த்திபனிடம் நீங்கள் வரலையா எனக் கேட்க பார்த்திபன் வருகிறேன் என பதிலளித்து விழாவுக்கு செல்லாமல் இருந்துள்ளார்.


ரகுமான் விழாவிற்கு வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பார்த்திபனுக்கு விஷால் அனுப்பிய வாட்சப் மெசேசையும் பார்த்திபன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


அதில், “சார், நீங்கள் வரலாற்றை உருவாக்கி விட்டீர்கள். ஐ லவ் யூ. என்னிடம் வார்த்தைகளே இல்லை. மற்றவர்களை விட உங்களை அங்கு மிஸ் செய்தேன். எனக்காகத்தான் நீங்கள் இதைச் செய்தீர்கள் எனத் தெரியும். எப்போதும் உங்களை நேசிப்பேன்” என விஷால் பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


தமிழ் சினிமாவின் இரு பெரும் இசை மேதைகளான இளையராஜாவையும், ரகுமானையும் ஒரே மேடையில் பார்க்கவும், பேசவும், பாடவும், இசைக்கவும் வைத்த பார்த்திபன் அவர்கள் இருவருக்காகவாவது நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கலாம்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அதிகாரிகளின் செயல் மிருகத்தனமானது - ஜி.வி.பிரகாஷ்அதிகாரிகளின் செயல் மிருகத்தனமானது - ... கமலுக்கு தான் இளையராஜா நல்ல பாடல்கள் கொடுத்தார் : ரஜினி வருத்தம் கமலுக்கு தான் இளையராஜா நல்ல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

southindian - chennai,இந்தியா
05 பிப், 2019 - 12:25 Report Abuse
southindian ilaiyaraja அவர்கள் முன் ரகுமான் அவ்வளவு பெரிய ஆளா. பார்த்திபன் சமாதானம் செய்து விழாவில் கலந்து கொள்ள செய்தற்கு. ரகுமான் தானாக முன் வந்து பெரியவர் இளையராஜா அவர்களின் விழாவிற்கு வந்திருக்கவேண்டும் . அதுதான் இருவருக்குமே மரியாதையை
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
05 பிப், 2019 - 05:16 Report Abuse
jayanantham இளையராஜா இசைவில் எதுவும் 'பொருள்' இருக்கும். சும்மா இசைவதற்கு இவர் ஒன்றும் ஏமாளியில்லை.
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
04 பிப், 2019 - 13:33 Report Abuse
Ram Sekar இந்த கிறுக்கன் தன்னோட அறிவாளித்தனத்தை காட்டணும், மேடையில சீன போடணும், படங்கள் இல்லாட்டியும் இப்படி பண்ணி தன்னை எல்லோரும் மெச்சனும்னு வழக்கம்போல பண்ண நினைச்சான். பாக்யராஜ் சிஷ்யர்களில் பாண்டியராஜ் மட்டும்தான் பெஸ்ட் (அவார்டு இல்லை என்றாலும்), இவன் இயக்கிய "புதிய பாதை" (வட சென்னை மாதிரி கதை) அப்புறம் "ஹவுஸ் புள்" அப்புறம் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" தவிர எதுவும் ஒழுங்கா இயக்கலை. உள்ளே வெளியே....படம் அப்பப்பா ஆபாசத்தின் உச்சக்கட்டம் 1993 -லேயே. அப்புறம் இவன் நடிச்சதெல்லாம் "சேரன்" மாதிரி வேறு இயக்குநர்களின் படங்களில்தான்.
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
05 பிப், 2019 - 18:56Report Abuse
Vasudevan Srinivasanஉள்ளே வெளியே படம் பற்றி அனைவரும் (உள்ளூர ரசித்துவிட்டு) குற்றம் சொன்னோம் சொல்கிறோம் இன்னமும் சொல்வோம்.. ஆனால் அதற்கு முன் அவர் எடுத்த சிறந்த படமான 'சுகமான சுமைகள்' படத்தை நாம் (அதாவது உள்ளே வெளியே படத்தை குற்றம் சொல்லியவர்கள்) வெற்றி பெறச்செய்தோமா..?...
Rate this:
04 பிப், 2019 - 07:32 Report Abuse
Arul Krish ivaru periya parupu
Rate this:
Ganesh Kumar - AUCKLAND,நியூ சிலாந்து
04 பிப், 2019 - 06:16 Report Abuse
Ganesh Kumar நான் செய்ய ஆசை படுவதை சிலர் மறுத்தால். உடனே நான் பதவியிலிருந்து விலகுவதுதான் முறையாகுமா? தான் என்ற அஹங்காரம்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  Tamil New Film Watchman
  • வாட்ச்மேன்
  • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
  • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Indian 2
  • இந்தியன் 2
  • நடிகர் : கமல்ஹாசன்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :ஷங்கர்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in