Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிங்கத்திற்கு ஓய்வு, யானைக்கு பயணமாகும் சூர்யா - ஹரி

25 ஜன, 2019 - 13:39 IST
எழுத்தின் அளவு:
Suriya---Haris-Yaanai-film-also-cop-based-story.?

சூர்யா - ஹரி கூட்டணியில் இதுவரை ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 ஆகிய படங்கள் உருவாகியிருக்கிறது. அதையடுத்து சிங்கம் 4 உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் ஆறாவது முறையாக இணையும் படத்திற்கு யானை என்ற டைட்டீல் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இப்படத்தை தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்., தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்ஜிகே படத்தை முடித்து விட்டு காப்பான் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதையடுத்து இறுதிச்சுற்று சுதா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ஹரியுடன் இணைகிறார்.

சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, இந்த யானை படத்திலும் காவல்துறை சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரியாகத்தான் நடிக்கிறாராம். ஆனால் இதற்கு முன்பு சூர்யா நடித்ததை விடவும் உயர் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த யானை படமும் சிங்கம் படத்தைப்போன்று வெற்றி பெற்றால் இரண்டு, மூன்று பாகங்களாக வரும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
த்ரிஷாவை விட வலுவான வேடத்தில் சமந்தாத்ரிஷாவை விட வலுவான வேடத்தில் சமந்தா சிம்பு படத்துக்கு 'யு' சான்று சிம்பு படத்துக்கு 'யு' சான்று

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

25 ஜன, 2019 - 17:35 Report Abuse
Kalyanaraman சிங்கம்,வேங்கை இப்போ யானை. ஹரிக்கு படத்துக்கு பேரு கூட யோசிச்சு வைக்கத் தெரியல. கதையும் பழிவாங்கல் கதைதான். அதே போல் டாடா சுமோவும் அறிவாளும் டஜன் கணக்குல புக் பண்ணிடுவாரு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in