Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தோழர் என்பதன் பொருள் மாறிவிட்டது : ராஜூ முருகன் ஆதங்கம்

24 ஜன, 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Thozhar-meaning-changed-:-Raju-Murugan-feels-bad

ஒலிம்பியா மூவில் சார்பில் அம்பேத்குமார் தயாரித்திருக்கும் படம் 'ஜிப்ஸி'. ஜீவா, நடாசா சிங், ஸன்னி வைய்ன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ராம் சிங், கருணா பிரசாத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 'சே' என்ற பெயரில் குதிரை ஒன்றும் நடித்திருக்கிறது. குக்கூ, ஜோக்கர் படங்களின் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியிட்டு விழாவில் பேசிய ராஜூ முருகன் : இந்தப்படம் அரசியல் படமல்ல. ஒரு அமைப்பு சார்ந்து எடுக்கப்பட்ட படமல்ல. ஒரு நியாயமான படம். என்னைப் பொருத்தவரை வாழ்க்கையும் அரசியலும் வேறு வேறு அல்ல.

இந்த படத்திற்கு 'தோழர் சந்தோஷ் நாராயணன் இசையில்' என்று விளம்பரப்படுத்தினேன். உடனே சிலர் என்னைத் தொடர்பு கொண்டு ஏன் சந்தோஷ் நாராயணனை தோழர் ஆக்கிவிட்டீர்கள்? என கேட்டார்கள். தோழர் என்பது உலகின் உன்னதமான வார்த்தை. தோழர் என்பது ஒரு கட்சி சார்ந்த வார்த்தையல்ல. தோழர் என்பது அன்பின் வார்த்தை. அதன் பொருளை தற்போது மாற்றிவிட்டார்கள்.

யாரெல்லாம் நீதிக்காக போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அநீதிக்கு எதிராக தன்னை ஏதேனும் ஒரு தளத்தில் நிறுத்தி போராடுகிறார்களோ அவர்களையெல்லாம் தோழர் என்று அழைக்கலாம். அந்த வகையில் இந்த படத்தில் ஜிப்ஸியும் ஒரு தோழன் தான். ஒரு தோழனின் குரலாகத் தான் ஜிப்ஸி இருக்கிறது.

இந்த படம் லவ் வித் மியூசிக்கலி படம். பாடல்கள் இருக்கிறது. அதில் சிறிது அரசியல் கலந்திருக்கிறது. அதிலும் எளிய மக்களின் நியாயமான அரசியல் பேசப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி தயாரிப்பாளர் செய்த முதலீடு திரும்ப கிடைக்க வேண்டும். அதற்கான அனைத்து கமர்சியல் அம்சங்களும் இதில் இருக்கிறது. இதற்காக பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.

இந்த பாடலில் தோன்றிய தோழர் நல்லக்கண்ணு ஐயா உள்ளிட்ட உண்மையான கள போராளிகளுக்கும் நன்றி.

இவ்வாறு பேசினார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஹன்சிகா போன், டுவிட்டர், ஹேக் செய்யப்பட்டதா ?ஹன்சிகா போன், டுவிட்டர், ஹேக் ... விரைவில் வெளியாகிறது நாடோடிகள் 2 விரைவில் வெளியாகிறது நாடோடிகள் 2

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 ஜன, 2019 - 03:41 Report Abuse
meenakshisundaram தோழர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் ,கட்சி நிதிக்கு உண்டியலை மாத்திரமே குலுக்கியவர்கள் இன்று மறைந்து விட்டார்கள் ,அவர்களின் கொளகைகளும் 'அம்போ'.அவர்கள் இன்று தமிழகத்தில் வெறும் லெட்டர் பேட் மாத்திரமே .மேலும் தேர்தல் நேரங்களில் கையேந்தி மற்ற கட்சிகளின் தலைவர்களிடம் 'பிச்சை'எடுக்கிறார்கள்.தனியே நிற்க திராணி இல்லை .என்றோ கூனி விட்ட இவர்கள் நிமிர்வது இனி இல்லை.ஏழைகளுக்கு ,தொழிலாளிகளுக்கு என்று பாடுபட்ட இந்த கம்யூனிஸ்டுகள் இன்று தங்களின் அறிவை இழந்து ஜாதிக்காட்சி நடத்துபவர்களுக்கு வாழ் பிடிக்கிறர்கள்.பாவம்.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
24 ஜன, 2019 - 21:42 Report Abuse
elakkumanan படம் நல்ல இருக்கோ இல்லையோ தெரியல, ஆனால், கம்மிகளுக்கு நேரம் இப்போ ரொம்ப மோசமா இருக்கு. நல்ல படைப்பாளி நாங்கள். படைப்பிற்கு நிறம் பூசினால் படைப்பு மறைந்து நிறம் மட்டுமே தெரியும். தேவைதானா சார்?
Rate this:
24 ஜன, 2019 - 18:35 Report Abuse
ஜாஸ்திபேசுற கம்மி படம்னு சொல்லாம சொல்லிட்டாப்ல. ஆனா பாட்டு கேக்க சகிக்கல.
Rate this:
mass -  ( Posted via: Dinamalar Android App )
24 ஜன, 2019 - 17:20 Report Abuse
mass கம்னியூஸ்ட் வெளக்கெண்ண படம் பிளாப் தான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in