Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வௌியானது பேட்ட, விஸ்வாசம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

10 ஜன, 2019 - 07:48 IST
எழுத்தின் அளவு:
Petta-vs-Viswasam-movie-released-:-Fans-celebrating-movies

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு ஐந்து நாட்கள் முன்னதாகவே, ரஜினி நடித்துள்ள பேட்ட படமும், அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படமும் ஒரே நாளில் இன்று(ஜன.,10) ரிலீஸாகி உள்ளன. தியேட்டர்களில் ரசிகர்கள் இருவரின் படத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

பேட்ட
2.0 படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பில் வௌியாகி உள்ள பேட்ட படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரஜினியுடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே பாடல்களும், டீசர், டிரைலரும் ஹிட்டாகி வரவேற்பை பெற்றன. நீண்ட இடைவௌிக்கு பிறகு ரஜினி இளமையான தோற்றத்திற்கு திருப்பியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பேட்ட படத்திற்கு பல ஊர்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம், பேனர் என இன்றும் ரஜினி ரசிகர்கள் அமர்க்கப்பளப்படுத்தி வருகின்றனர்.


விஸ்வாசம்
அஜித் - சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த படம். இந்தப்படம் அறிவிப்பு வந்தபோது, சிவாவுடன் அஜித் இணைகிறாரே என அஜித் ரசிகர்களே வருத்தப்படும் அளவுக்கு விமர்சனங்கள் வந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் எல்லாம் இன்று எங்கு போனது என்றே தெரியவில்லை. காரணம் படத்தின் ஒரு டிரைலரை படம் எப்படிப்பட்டது என அஜித் ரசிகர்களை புரிய வைத்து விட்டது. டிரைலரில் பல புதிய சாதனைகளை படைத்த விஸ்வாசம் படம் முழுக்க முழுக்க குடும்ப சென்ட்டிமென்ட்டை மையமாக கொண்டு உருவாகி உள்ளது. அஜித்தின் தோற்றம், நயன்தாராவின் லுக் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி படத்துடன் தைரியமாக களமிறங்கி உள்ளார் அஜித். ரஜினி படத்தை விட முன்கூட்டியே பல ஊர்களில் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு 1மணிக்கு விஸ்வாசம் படம் திரையிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்து அஜித் படம் வருதால் அவரது ரசிகர்கள் திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் அமர்க்களப்படுத்தி வருகின்றனர். வான் உயர கட்-அவுட், வான வேடிக்கை, ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என கெத்து காட்டுகின்றனர். ஓப்பனிங் மாஸ் என்றைக்கும் நாங்கள் தான் அவர்கள் செய்யும் கொண்டாட்டாமே சாட்சி.

தமிழகத்தில் 1100 திரையரங்குகள் உள்ளன. இரண்டு படங்களுக்கும் சரிசமமாக தியேட்டர்கள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு படங்களும் தலா 450 தியேட்டர்களில் வௌியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தளபதி, மன்னன் படங்களுக்குப் பிறகு 2.0, பேட்டதளபதி, மன்னன் படங்களுக்குப் பிறகு 2.0, ... இந்த ஆண்டு அனிஷாவுடன் திருமணம்: உறுதி செய்த விஷால் இந்த ஆண்டு அனிஷாவுடன் திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

10 ஜன, 2019 - 08:27 Report Abuse
ஆப்பு ஐயா ரஜினி கல்லூரி மாணவராக வருகிறாராம். எந்த முதியோர் கல்லூரின்னு தெரியலை.
Rate this:
10 ஜன, 2019 - 08:20 Report Abuse
aarumugam visvasam Movei super
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in