Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

2019-கேரள அரசு விருதுகளுக்கான படங்கள் திரையிடல் துவங்கியது

26 செப், 2020 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Screening-of-films-for-2019-Kerala-Government-Awards-has-started

மலையாளத்தில் வெளியாகும் சிறந்த படங்களுக்கு, ஆண்டுதோறும் கேரள அரசு விருதுகளை வழங்கி வருவதை வழக்கமாக வைத்துள்ளது. தமிழக அரசு விருதுகளை போல இரண்டு ஆண்டுகளுக்கான விருதுகளை மொத்தமாக அறிவிப்பது, இந்த விருதுகளுக்கான தேர்வு நடைபெறுகிறதா என்பதே தெரியாமல் இருப்பது என இல்லாமல், ஆண்டுதோறும் இந்த விருதுகளுக்கான தேர்வு முறை வெளிப்படையாகவே நடைபெற்று வருகிறது.


இந்தமுறை கொரோனா தாக்கம் காரணமாக இந்த திரையிடல் இருக்க வாய்ப்பில்லை என்றும் சில மாதங்கள் தள்ளி வைக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தேர்வுக்காக அனுப்பப்பட்டுள்ள 119 படங்களும் தேர்வுக்குழுவினருக்கு திரையிடப்படும் பணி தற்போது துவங்கியுள்ளது.


உள்ளூர் தேவுக்குழுவினர், மற்றும் கேரளாவுக்கு வெளியில் இருந்து வரும் தேர்வுக்குழுவினர் என இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக படங்கள் திரையிடப்படுகின்றன. வெளியூரில் இருந்து வந்த தேர்வுக்குழுவினர் முறையான தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்..


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அபிநந்தன் வேடத்தில் விஜய் தேவரகொண்டாஅபிநந்தன் வேடத்தில் விஜய் ... இயற்கை தோட்டம் அமைக்க மோகன்லால்-மம்முட்டி அழைப்பு இயற்கை தோட்டம் அமைக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in