Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சாய்னாவாக பரிணிதி சோப்ரா : ஷ்ரத்தா கபூர் விலகல்

16 மார், 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
Parineeti-Chopra-replaces-Shraddha-Kapoor-in-Saina-Nehwal-biopic

பிரபல இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சாய்னா நேவலின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக தயாராகிறது. புஷன் தயாரிக்கிறார், அமேல் குப்தா இயக்குகிறார். சாய்னாவாக பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வந்தார். இதற்காக அவர் சாய்னாவை சந்தித்து சிலநாள் அவருடன் இருந்து, அவரது மேனரிசங்களை கற்றதுடன், பயிற்சியும் எடுத்தார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. சாய்னா பயிற்சி பெறுவது போன்ற காட்சிகள், அவர் கல்லூரி காட்சிகள் படமானது.

இந்த நிலையில் ஷ்ரத்தா கபூருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவரால் நடிக்க முடியவில்லை. படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது, சாய்னா படத்துக்கு கொடுத்த கால்ஷீட் காலத்தில் அவர் காய்ச்சலில் இருந்தார். தற்போது அவர் ஏற்கெனவே கால்ஷீட் கொடுத்த மற்ற படங்களில் நடிக்க வேண்டியது இருக்கிறது. இதனால் அவரால் சாய்னா படத்தில் தொடர முடியாமல் அதிலிருந்து விலகிக் கொண்டார்.

தற்போது அவருக்கு பதிலாக பரிணிதி சோப்ரா நடிக்கிறார். தற்போது அவர் டென்னிஸ் பயிற்சி எடுத்து வருகிறார். ஷ்ரத்தா கபூர் நடித்த காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட இருக்கிறது. "ஷ்ரத்தா கபூர் கால்ஷீட் பிரச்சினையால்தான் படத்திலிருந்து விலகினார். வேறு எதுவும் காரணம் இல்லை. தற்போது பரிணிதி நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை முடித்து விடுவோம்" என்கிறார் தயாரிப்பாளர் புஷன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாமியார் மெச்சும் மருமகள்!மாமியார் மெச்சும் மருமகள்! ஹாலிவுட் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் ஹாலிவுட் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ram Sekar - mumbai ,இந்தியா
16 மார், 2019 - 20:39 Report Abuse
Ram Sekar சாய்னா முகத்துக்கு அதிகம் பொருத்தம் ஷ்ரத்தா கபூர் தான். பிரனீத் சோப்ரா, ஆலியா இதுகள் எல்லா இதுக்குதான் நடிக்க வருதுங்க?? பெரிய பேமானி, சாரி பேமிலி=ஐ சேர்ந்ததால் வாய்ப்புகள் அதிகம். கொஞ்சமாவது முகமாவது பொருந்தாரா மாறி நடிகர்கள் தேர்ந்தெடுங்கடா கேடுகெட்ட பயலுகளா. தக்காளி, அடுத்தவன் சிந்த கதை எடுத்தா போதும், ஒரு சொந்த கதையும் தெரியாது, சொந்த கதையும் ஒன்னும் இல்லை, NRI காதல் கதை, 3 பேர் முக்கோண காதல் கதை,கொஞ்சம் படுக்கை காட்சிகள், உதட்டோடு முத்தம் காட்சிகள் இதுதான் பாலிவுட். பாலிவுட் நடிகைகள் நடிப்பில் பெயர் வாங்கும் விஷயம் இந்த "படுக்கை காட்சிகள், படுக்கை அறையில் நடக்கும் சம்பாஷணைகள், உணர்ச்சி பூரவமான லிப்-லாக் இதில்தான் சூப்பரா நடித்து பீற்றிக்கொண்டு சீனு போடுவாய்ங்க. ஏற்கனவே இந்த பாலிவுட் கதைகள் பற்றி நான் இதே கருத்து போட்டேன். இப்போ மேலே கொஞ்சம் சேர்த்துதான் பதிவு போட்டுள்ளேன்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in