Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

நடிகர்களால் அச்சுறுத்தல் : கங்கனா புகார்

22 ஜன, 2019 - 15:20 IST
எழுத்தின் அளவு:
Actors-threatening-says-Kangana

மும்பை: நடிகர்களால் பலமுறை துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாக, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து, மீ டூ என்ற தலைப்பில், சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், நடிகர்களால், தான், பலமுறை துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதாக கூறியுள்ளார். இவர், தாம் துாம் என்ற தமிழ் திரைப்படத்தில், நடித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா கூறியதாவது : துன்புறுத்தல்கள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன. என் திரையுலக வாழ்க்கையில், தவறான நோக்கத்துடன் அணுகுபவர்களை பலமுறை சந்தித்துள்ளேன். அவை பாலியல் துன்புறுத்தல்கள் அல்ல. பலரது தற்பெருமைகளால், அச்சுறுத்தல்களையும், அவமானங்களையும் சந்தித்து உள்ளேன்.

படப்பிடிப்பு தளங்களில், பல மணிநேரம் காக்க வைக்கப்பட்ட அனுபவமும் உண்டு. தவறான தேதிகளில், படப்பிடிப்புக்கு வரவழைத்து, திருப்பி அனுப்புவர். இதனால், பல பட வாய்ப்புக்களை இழந்திருக்கிறேன். கண்ணியமில்லாத வாழ்க்கை தேவையில்லை என நம்புகிறேன். எனவே, பணியிடங்களில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக, பெண்கள் குரலை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி கொள்ளை : டில்லியில் பரபரப்புகமல் நாயகியை நடு ரோட்டில் தாக்கி ... ஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் இயக்கம் ஹிந்தி காஞ்சனாவில் அக்ஷய் : லாரன்ஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23 ஜன, 2019 - 10:23 Report Abuse
Nallavan Nallavan இப்படிப் போஸ் கொடுத்தா ராமாயணம், மகாபாரதமா சொல்லிக்கொடுக்க வருவாங்க ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in