Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

மாறிய அஜித்.... மாறுவாரா விஜய்...?

29 அக், 2019 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Ajith-changed....-When-Vijay-will-change.?

தீபாவளி படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு சிறப்பு இருக்கும். இந்த தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'கைதி' என இரண்டு படங்கள் மட்டுமே வெளிவந்தன.

'பிகில்' படம் ரூ.180 கோடி பட்ஜெட்டுடன் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, கதிர், இந்துஜா என எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்த படம். ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரகுமான் இசை என ஒரு பக்கா கமர்ஷியல் படம்.

இந்தப் படத்தில் சொல்லப்பட்ட விஷயங்களில் ரெபா மோனிக்கா ஜான், வர்ஷா பொல்லம்மா சம்பந்தப்பட்ட இரண்டே இரண்டு காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்துமே ஏற்கெனவே பல படங்களில் நாம் பார்த்த காட்சிகள்தான்.

இரண்டு நாளில் 100 கோடி, மூன்று நாளில் 150 கோடி என்று சொல்லிக் கொள்வது பெருமையல்ல. படத்தில் பெருமைப்படும் விதமாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நன்றாக படிக்காத ஒரு மாணவன் பரீட்சையில் காப்பியடித்து அதிக மதிப்பெண்களை வாங்கிவிட்டால் நன்றாக படிக்கும் மாணவனுக்கு கோபம் வரத்தான் செய்யும். ஆனால், இங்கு தரமான படத்தைக் கொடுத்த 'கைதி' படக்குழுவினர் சுமாரான, கமர்ஷியல் படமான 'பிகில்' படத்தைப் பற்றி எந்தப் பொறாமையும்படவில்லை.

இத்தனைக்கும் 'கைதி' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான், இப்போது விஜய் நடிக்கும் 64வது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதற்காக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும். 'மாநகரம், கைதி' என இரண்டு வித்தியாசமான படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ், விஜய் படத்தை எப்படியும் வித்தியாசமாகக் கொடுப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்குத் தானாகவே வந்துவிடும்.

'கைதி' படம் போன்ற பாடல்கள் இல்லாத, கதாநாயகி இல்லாத படங்களில் விஜய் நடிக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. ஆனால், வழக்கமான காட்சிகள், பில்ட் அப் வசனங்கள், சண்டை என பார்த்துப் பார்த்து சலித்துப் போன சினிமாவிலிருந்து விஜய் விலகி வந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கத்தில்தான் நேர்மையான சினிமா ரசிகர்கள் 'பிகில்' படம் பற்றி சில எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.

விஜய்யின் சமகால போட்டியாளராகக் கருதப்படும் அஜித் கூட 'நேர்கொண்ட பார்வை' படத்தில் வழக்கமான தடத்திலிருந்து மாறி நடித்து குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றுவிட்டார். ஆனால், விஜய் இதுவரை கமர்ஷியல் பார்முலாவிலிருந்து விலகி சற்றே வித்தியாசமான படங்களில் கூட நடிக்க முயற்சிக்கவில்லையே ஏன் என்பதை அவரது ரசிகர்கள் யோசித்திருப்பார்களா?.

தமிழை விட பக்கா கமர்ஷியல் படங்களைக் கொடுக்கும் தெலுங்கு ஹீரோக்கள் கூட இப்போது சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து இந்திய அளவில் புகழ் பெறத் தொடங்கி விட்டார்கள்.

'பிகில்' மாதிரியான கமர்ஷியல் படங்களில் விஜய் நடித்தாலே 150 கோடி வசூல் வருகிறது என்று சொன்னால், அசத்தலான, இதுவரை வெளிவராத ஒரு புதிய கதையில் விஜய் நடித்தால் அந்த வசூல் இரு மடங்காகி 300 கோடி வரை போக வாய்ப்பிருக்கிறது அல்லவா ?.

இப்படி நடித்தால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்து நடிப்பதை விட்டுவிட்டு, இப்படி நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்ற நிலை வந்தால் அது சினிமாவுக்கும் நல்லதாகத்தானே அமையும்.

ஒரு மாற்றத்திற்கு 'கைதி' படத்தில் கார்த்திக்குப் பதிலாக விஜய் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்திருப்பீர்களா...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்களேன்...

Advertisement
கருத்துகள் (69) கருத்தைப் பதிவு செய்ய
செப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய வெற்றியா, பெரிய வெற்றியா?செப்டம்பர் மாதம் படங்கள் - சிறிய ... சகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல் சகலவல்ல நாயகரே: கமல் 60 ஸ்பெஷல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (69)

meenakshisundaram - bangalore,இந்தியா
02 நவ, 2019 - 05:23 Report Abuse
meenakshisundaram அஜித்துடன் Vijay யை ஒப்பிட வேண்டாம் ,Ajith லெவல் வேறே ,ஆனா விஜய் அந்த லெவெலுக்கு வரவே மாட்டார்.
Rate this:
Karthik - Tirupur,இந்தியா
31 அக், 2019 - 16:50 Report Abuse
Karthik நீங்க சொல்றத பார்த்த , விஜயை வைத்து படம் எடுக்கறவிங்களும் இனிமேல் தலைல துண்டை போடணும்னு சொல்லறீங்க, அஜித்தை வெச்சு ஒருத்தர் எடுத்தார் இப்ப எங்க இருக்காருன்னே தெரில, இனிமேல் விஜயை வைத்து எடுப்பர்களும் நட்டம் ஆக வழி சொல்றீங்க, என்னமோ NKP 100 கோடி வசூல் பண்ணி ஹிட் ஆன மாற இருக்கு நீங்க சொல்றது
Rate this:
Parthasarathy Ranganathan - chennai,இந்தியா
31 அக், 2019 - 12:53 Report Abuse
Parthasarathy Ranganathan அவர் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் நடிப்பார். ஏனெனில் அவருக்கு நடிப்பு வராது.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
31 அக், 2019 - 08:09 Report Abuse
Vijay சினிமா என்பது ஆண்கள் பார்ப்பதற்காக மட்டும் இல்லை .. கைதி போன்ற படங்களில் விஜய் நடிக்க தேவை இல்லை .. இல்லத்தரசிகள் , பெண்கள், குழந்தைகள் யாரும் படம் பாக்க வரமாட்டார்கள் .. ஒரு பொழுதுபொற்க்கிற்காக குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்கள் கைதி போன்ற கதைகளை விரும்ப மாட்டார்கள் .. அசுரன் மிக அருமையான படம் எத்தனை பெண்கள் இல்லத்தரசிகள் குழந்தைகள் அந்த படம் பார்க்கவேண்டும் என்று வந்தார்கள் ..
Rate this:
Praveen - Chennai,இந்தியா
30 அக், 2019 - 12:54 Report Abuse
Praveen Vijay nale palaperku stomach fire aaguthu... film ke ipdi na avar politics vanthutaarna, stomach fire gang sethe poiruvanga pola.... ithula oru koottam vekkame illama mathatha pathi pesuranga... poi unga kudumbatha gavaninga boss...
Rate this:
மேலும் 64 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in