Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா? - சீனு ராமசாமி

23 செப், 2020 - 20:00 IST
எழுத்தின் அளவு:
Seenu-Ramasamy-about-OTT

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற யதார்த்தமான படங்களால் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. ஓடிடி குறித்து இவர் கூறுகையில், "என்னைப்பொறுத்தவரை ஓ.டி.டி வரவால் திரையரங்குகள் வளர்ச்சிதான் பெறும், பாதிப்படையாது. டிவி வந்தபோது சினிமா அழியும், அழியும் என்று சொன்னார்கள். ஆனால் அதில் செய்யப்பட்ட விளம்பரங்களால் மக்கள் திரையரங்குகளுக்கு வருவது அதிகரித்தது. அதேபோலத்தான் இப்போதும் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள்.

திரையரங்குகள் எப்போதும் மாற்றமடையாது. சினிமாவில் எத்தனையோ தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எது மாறினாலும் மனிதனுக்கும் திரைக்குமான உறவு இன்னும் மாறவில்லை. காரணம், மனிதனின் அடிப்படை உணர்ச்சியே ஒன்று கூடுதல் தான். கொண்டாட்டத்திற்கும், தூக்கத்திற்கும், போராட்டத்திற்கும் ஒன்று கூடுவதும் எனும் மனிதனின் அடிப்படை உணர்ச்சியே இதற்கான அடிப்படை காரணம்.

திரையரங்கம் சென்றுசேர முடியாத படங்கள் ஓ.டி.டி யில் வந்துசேரும். எல்லாவிதமான படங்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தன்னம்பிக்கை தரக்கூடிய இடமாக ஓ.டி.டி இருக்கும். இதனால், திரையரங்கங்கள் வீழ்ச்சி அடையாது. திரையரங்குகள் அழிந்துபோகாது. மனிதனின் ஒன்றுகூடுதல் உணர்வின் வெளிப்பாடுதான் திரையரங்கம். மக்கள் திரையரங்குகளை மிஸ் செய்ய மாட்டார்கள். திரையரங்கம் வந்துசேர முடியாத படங்கள் ஓ.டி.டியில் கவனம்பெறும், உலகப்புகழ்பெறும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம்ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா ... போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Muthu - Nagaipattinam,இந்தியா
25 செப், 2020 - 09:14 Report Abuse
Muthu ஒரு காலத்தில் தியேட்டர் களே முன்வந்து டிக்கெட் களை பிளாக் ல் விற்றார்கள். அதிக பணம் வந்தது. அதே நேரம் நிறைய இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் பார்த்து விட்டு சபித்து விட்டு போனார்கள். இன்று கர்மா வேலை செய்கிறது. அதுவில்லாமல் முதலாளிகள் அறிந்தோ அறியாமலோ நிறைய பெட்ரோல் திருட்டு நடக்கிறது. பொருள்களின் விலை தாறுமாறாக விற்கிறது. எவன் வருவான்?? ஆகா இந்த தியேட்டர் கள் மூடப்படவேண்டும் என்பது இயற்கை முடிவு செய்தது, யாரும் கர்மாவை மாற்றவோ மீறவோ முடியாது.
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
25 செப், 2020 - 05:26 Report Abuse
thonipuramVijay இந்த சாம்பார் ராமசாமி சொல்வது தவறு, அந்த காலத்தில் தியேட்டரில் ticket விலை popcorn விலை , parking விலை அனைத்தும் நியாயமாக இருந்ததால் , தியேட்டருக்கு மக்கள் வந்தார்கள், ஆனால் இப்போது அப்படியல்ல, தியேட்டர் காரர்களின் அடவடியால் ticket விலை , பாப்கார்ன், parking எல்லாவற்றிலும் கொள்ளை , பேராசை perunastam yenbathu 100 sathaveetha unmai , இனிமேல் தேட்ட்டருக்கு வரமுடியாது போ..
Rate this:
24 செப், 2020 - 10:44 Report Abuse
டவுட் தனபாலு பேராசையால் தான் சினிமாவும் தியேட்டரும் அழியும் ....பகற்கொள்ளை அடிக்கும் இது நிலைக்காது ....கூத்தாட கோடிகளில் சம்பளம் .. ஹீரோ வழிபாடு ... இதெல்லாம் வெகு நாட்கள் நிலைக்காது ...
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
24 செப், 2020 - 07:26 Report Abuse
siriyaar அழியட்டும் சினிமா தெளியட்டும் தமிழன்.
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
24 செப், 2020 - 04:39 Report Abuse
NicoleThomson உண்மையில் இந்த ஓTT வரவால் படங்களின் தரம் தான் குறைந்துள்ளது , குடும்பத்தோடு உட்கார்ந்து படம் பார்க்கும் நிலையில் எத்துணை படம் வருது? முக்கியமாக உனது தாயோடு உட்கார்ந்து படங்களை பாரு அப்போது தெரியும் OTT எவ்வலதூரம் சினிமாவினை சீரழித்துள்ளது எண்டு எல்லாம் மலையாள பெண்குட்டி ரேஞ்சுக்கு இருக்கு
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in