Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இடைவிடாத போராட்டம் : அட்லீக்கு வாய்ப்பு தந்த ஷாரூக்கான்?

01 செப், 2020 - 12:14 IST
எழுத்தின் அளவு:
Atlee-got-Sharukh-khan-film?

விஜய் நடித்த பிகில் படத்தை இயக்கிய பிறகு ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் படத்தை அட்லீ இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தையும் நடத்தினார்கள். ஆனால், இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பு இதுவரையிலும் வெளியாகவில்லை.

இதனிடையே, கடந்த இரண்டு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காத ஷாரூக்கான் ஒரு வழியாக அட்லீக்கு தன் படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்துவிட்டார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்லீ இடைவிடாமல் ஷாரூக்கானை தொந்தரவு செய்து கடைசியில் வாய்ப்பைப் பெற்றுவிட்டார் என்கிறார்கள். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத் துவக்கத்தில் ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்கான முழு கதையையும் ஷாரூக்கிடம் சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் அட்லீ.

இருந்தாலும் ஹிந்தித் திரையுலகில் கடைசி நேரத்தில் கூட என்ன வேண்டுமானாலும் நடக்கும். இந்தக் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாமும் காத்திருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
செல்லக்குட்டிகளுக்கும் ஆடை அணிவித்து அழகு பார்த்த கீர்த்தி சுரேஷ்செல்லக்குட்டிகளுக்கும் ஆடை ... நகைச்சுவை நடிகை வித்யுலேகா நிச்சயதார்த்தம் நகைச்சுவை நடிகை வித்யுலேகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sankar - Chennai,இந்தியா
02 செப், 2020 - 17:17 Report Abuse
Sankar ஷாருகான் ஆரியரா அல்லது திராவிடறா??
Rate this:
02 செப், 2020 - 16:57 Report Abuse
Sathriyan, Mouna Ragam copy cat.. Vijay: Why blood. SRK: 😐😐Vijay: Same blood.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in