Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'சூரரைப் போற்று' - மீண்டும் ஓடிடி சர்ச்சை

01 ஜூலை, 2020 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Did-Sooraraipottru-releasing-in-OTT?

'இறுதிச் சுற்று' படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. இப்படம் கடந்த மாதம் தணிக்கை செய்யப்பட்டு 'யு' சான்றிதழையும் பெற்றது. சூர்யா தயாரித்த 'பொன்மகள் வந்தாள்' படம் மே 29ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. அதன் காரணமாக 'சூரரைப் போற்று' படத்தையும் ஓடிடியில்தான் வெளியிடுவார்கள் என அப்போது ஒரு சர்ச்சை எழுந்தது. அதற்காக உடனடியாக 'சூரரைப் போற்று' படத்திற்கான தணிக்கையைப் பெற்றார்கள்.

கொரானோ தொற்றால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத சூழலில் தணிக்கை பெற்றதும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வருடத்திற்குள்ளாக தியேட்டர்கள் திறக்க வாய்ப்பில்லை என்று சிலர் கொண்டிருக்கிறார்கள்.

ஹிந்தியில் அக்ஷய்குமார் நடித்துள்ள படம் உள்ளிட்ட 7 படங்கள் அடுத்து ஓடிடியில் வெளியாகின்றன. தமிழில் நேரடி ஓடிடிக்கு சூர்யா ஆதரவு தெரிவித்ததால் 'சூரரைப் போற்று' படத்தை எப்படியாவது ஓடிடியில் வெளியிட மீண்டும் பேச்சு வார்த்தை நடப்பதாக ஒரு பரபரப்பை டோலிவுட்டில் ஏற்படுத்தியுள்ளனர்.

'சூரரைப் போற்று' படத்தின் சாட்டிலைட் உரிமை ஏற்கெனவே பெரிய விலைக்கு விற்றுள்ளார்கள். தயாரிப்பு நிறுவனத் தரப்பில் படத்தை தியேட்டரில்தான் வெளியிடப் போகிறோம் என தெரிவித்துள்ளார்களாம். இந்நிலையில் மீண்டும் இந்த சர்ச்சை எழ என்ன காரணம் எனத் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வருகிறார் மந்த்ராமீண்டும் வருகிறார் மந்த்ரா சத்தியமா விடவே கூடாது - ரஜினி ஆத்திரம் சத்தியமா விடவே கூடாது - ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

LAX - Trichy,இந்தியா
06 ஜூலை, 2020 - 02:49 Report Abuse
LAX இவன் அடுத்த விசய்.. தனக்குத் தானே பத்த வெச்சுக்கறது.. அப்புறம்.. சர்ச்சை.. குர்ச்சை னு ஏதாவது கொளுத்திப் போட்டத கொளுந்து விட்டு எரிய வெக்கிறது..
Rate this:
LAX - Trichy,இந்தியா
06 ஜூலை, 2020 - 02:44 Report Abuse
LAX Mr. J.V.Iyer Super.. Super..
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 ஜூலை, 2020 - 04:14 Report Abuse
J.V. Iyer ஓடிப்போகும் படம் ஓடோடியில் போனால் என்ன, எங்கு போனால் என்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in