Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவு

28 பிப், 2020 - 18:26 IST
எழுத்தின் அளவு:
Court-order-on-Ilayaraja---Prasad-Studio-case

சென்னை, சாலிகாரமத்தில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவின் ஒரு ரெக்கார்டிங் தியேட்டரில் இருந்து தன் படங்களுக்கு இசையமைத்து வந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் அங்கிருந்து இசையமைத்து வந்த அவரை, பிரசாத் லேப் நிர்வாகம், சமீபத்தில் வெளியேற்றியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இசையமைப்பாளர் இளையராஜா, பல முறை சொல்லிப் பார்த்தும், நிர்வாகத் தரப்பில் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இப்பிரச்னையில் சமரசம் பேசுவதற்காக, பாரதிராஜா தலைமையில், சீமான், பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர், பிரசாத் ஸ்டூடியோவுக்குச் சென்றனர். ஆனால் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து, பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆனது. இதை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தது. அங்கும் தீர்வு எட்டப்படவில்லை.

இந்த வழக்கு இன்று(பிப்., 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை வைத்து ரம்யா விளக்கம்மனிதனுக்கு மதமில்லை, எலும்பு ஓட்டை ... ஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன் ஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vijay - coimbatore,இந்தியா
23 மார், 2020 - 17:14 Report Abuse
vijay இரும்படிக்கிற இடத்தில "ஈ"க்கு, அதான்பா முன்னாள் சினிமாக்காரன் சீமானுக்கு என்ன வேலை??
Rate this:
ponssasi - chennai,இந்தியா
05 மார், 2020 - 14:44 Report Abuse
ponssasi என்னோட கேஸ் ஒன்னு ஆறு வருடங்களாக இழுக்குது யுவர் ஹொனர், என் கேச எப்ப ஐயா முடிப்பீங்க, இளையராஜா கேஸ் இப்ப என்ன அவசரம், நாற்பது வருடங்கள் வாடகை கொடுக்காமல் பயன்படுத்தினால் அது அவருக்கு சொந்தமாகிவிடுமா? ஸ்டுடியோவுக்கு பண நெருக்கடி இருக்கலாம் அதை இளையராஜா வாடகை மூலம் சரிசெய்வாரா? அட்வான்ஸ் கொடுப்பாரா? இப்போதெல்லாம் விளம்பரத்திற்கு தீர்ப்பு என்றாகிவிடும் போல இருக்கிறது. ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in