Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாநாடு - தயாரிப்பாளருக்கு மீண்டும் சிம்பு தூது

19 ஆக, 2019 - 19:22 IST
எழுத்தின் அளவு:
Maanadu-:-Simbu-try-to-work-again

சென்னை: மாநாடு படத்தில் நடிக்க மீண்டும் வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளருக்கு நடிகர் சிம்பு தூது அனுப்பிருப்பதாக தெரிகிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கடந்த ஆண்டு இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

செக்கச் சிவந்த வானம், வந்தா ராஜாவா தான் வருவேன் ஆகிய படங்களில் நடித்த முடித்த சிம்பு உடனடியாக இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வழக்கம் போல படப்பிடிப்பை தொடங்காமல் தவிர்த்து வந்தார்.

சிம்புவிடம் இருந்து கிடைத்த கால்ஷீட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் பொறுமையாக காத்திருந்தார். இயக்குனர் வெங்கட்பிரவும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் தவிர்த்து வந்தார்.

ஆனால் இருவரின் பொறுமையையும் சோதித்த சிம்பு, ஹன்சிகாவின் மகா படத்தில் முதல் கெஸ்ட் ரோலில் நடித்தார். பின்னர் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார். அப்போதும் மாநாடு படக்குழு சிம்புவுக்காக காத்திருந்தது.

ஆனால் மாநாடு படத்தில் நடிக்க சிம்பு வரவேயில்லை. சனி, ஞாயிறு நடிக்க மாட்டேன், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே நடிப்பேன் என ஏகப்பட்ட கன்டிசன் போட்டார். இதனால் பொறுமையிழந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவை மாநாடு படத்தில் இருந்து நீக்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிம்பு, மாநாடு படத்துக்கு போட்டியாக மகா மாநாடு படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார். அதுவும் தனது சொந்த தயாரிப்பில் அந்த படம் எடுக்கப்படும் என சிம்பு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகியது.

மாநாடு தயாரிப்பாளரை பயமுறுத்துவதற்காகவே சிம்பு இந்த அறிவிப்பை மறைமுகமாக வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சுரேஷ் காமாட்சிக்கு போன் செய்த சிம்பு, படத்தில் நடிக்க தான் தயாராக இருப்பதாகவும், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்புவை தொடர்ந்து அவரது அம்மாவும், தயாரிப்பாளருக்கு போன் செய்து அதே கருத்தை கூறியிருக்கிறாராம். ஆனால் மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்கியதில் இருந்து பின்வாங்குவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலர், வெங்கட்பிரபுவிடம் மாநாடு கதை கேட்டு வருகின்றனர். அவர்களில் யார் முதலில் ஓகே சொல்கிறார்களோ, அவரை வைத்து படத்தை துவக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கவினுடன் மோதல் - பிக்பாஸ் வீட்டில் கேமராவை உடைத்த கஸ்தூரி?கவினுடன் மோதல் - பிக்பாஸ் வீட்டில் ... லவ் ஆக்சன் டிராமாவை நம்பியிருக்கும் நயன்தாரா லவ் ஆக்சன் டிராமாவை நம்பியிருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
20 ஆக, 2019 - 04:26 Report Abuse
Subramanian Arunachalam தயாரிப்பாளரை பிடித்த சனி இன்னும் விலகவில்லை போல் இருக்கிறது தயவு செய்து மிகவும் கவனமாக இருக்கவும் . வலை விரிக்கப்பட்டுள்ளது . அதில் பொய் சிக்க வேண்டாம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in