Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பக்கிரி வசூல் என்ன?

26 ஜூன், 2019 - 09:38 IST
எழுத்தின் அளவு:
What-about-Pakkiri-collection.?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடித்த பிரெஞ்சு - ஆங்கிலப் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆப் தி பகிர்'. ஹாலிவுட் இயக்குனர் கென்ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம், ஜக் வார்ட்ரோபின், 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆப் தி பகிர்' என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட காமெடி படமாகும். இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியாகி படு தோல்வியை சந்தித்தது. அதனால் மற்ற நாடுகளில் படத்தை வெளியிடும் எண்ணத்தை கைவிட்டதாக தகவல் வெளியானது. ஆனாலும் இப்படத்தின் தமிழ் டப்பிங் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தார் தனுஷ்.

தமிழில் தன்னுடைய படம் வெளியாகி நீண்ட காலமாகிவிட்டதால் படம் 'தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆப் தி பகிர்' படத்தை 'பக்கிரி' என்ற பெயரில் டப் பண்ணினார். அவருடைய வுண்டர்பார் நிறுவனம் தற்போது படத்தயாரிப்பை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு ரஜினியின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது. பக்கிரி படத்தை 'ஒய்நாட் எக்ஸ்' நிறுவனம் வெளியிட்டது.

தமிழகத்தில் விமர்சன ரீதியாக இப்படம் வரவேற்பை பெற்றாலும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. டப்பிங் படம் என்ற மனநிலை தான் மக்கள் மத்தியில் உள்ளது. மேலும் படத்திற்கு போதிய புரோமோஷனும் இல்லை. இதனால் கலெக்ஷன் இல்லை. தமிழகம் முழுக்க இப்படம் வசூலித்த தொகை ரூ.1 கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டுகொள்ளாத விஜய்சேதுபதிலட்சுமி ராமகிருஷ்ணனை கண்டுகொள்ளாத ... பிக்பாஸில் இணைந்தார் மீரா மிதுன் பிக்பாஸில் இணைந்தார் மீரா மிதுன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
30 ஜூன், 2019 - 08:14 Report Abuse
ஆரூர் ரங் நல்ல தரமான நடிப்புளால் படங்களுக்கு தமிழ்நாடு லாயக்கில்லை என்பதை தனுஷ் புரிந்துகொள்ளவும் . கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் ல்ரசிகர்களுக்குகேற்ற படம் பண்ணினாலே போதும்
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
28 ஜூன், 2019 - 02:51 Report Abuse
 nicolethomson வுண்டர்பார் படம் ஒரு பன்னாடையை படம் டைரக்ட் பண்ண வெச்சுதே அது தான் இவ்ளோ பெரிய ளாஸுக்கு காரணமா?
Rate this:
skv - Bangalore,இந்தியா
27 ஜூன், 2019 - 07:55 Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒருபடம் வெற்றியோ தோல்வியோ இடையறாது ரொம்பவேகாமன். விஜய் நடிச்ச போக்கிரி யம் தெலுகு டாப்பிங்க் ஓர் ரீமேக் (தெரியாது) பிரபுதேவா இயக்கம் எவ்ளோ வெற்றிகரமா ஓடியது அதுலேயும் போலீசு ன்ணுஒருகேவலம் வருமே அவனை இப்போதும் இந்தப்படம் டிவிலேபார்க்கும்போது அவ்ளோ எரிச்சல் கோவம் வரும் , பல படங்கள் தோல்வியும் ஆனதுண்டு ,
Rate this:
மதுரைவீரன், திருவள்ளூர் வொண்டர் பார் நிறுவனம் படம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தம்- பின்ன ஜமீந்தார் ரஞ்சித்த வச்சி படம் எடுத்தா நடுத்ததெருவுக்கு தான் வரனும்...கரைக்டா வந்துட்ட...இன்னமும் அனுபவிப்ப...அந்த சொரிப்பய நிச்சயம் அழிவான், கூட இருப்பவனையும் அழிப்பான்...ஏன்னா அவன் ஒரு மென்டல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in