Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தோல்வியை பரிசளித்த வாக்காளர்களுக்கு சுரேஷ் கோபி நன்றி

25 மே, 2019 - 17:28 IST
எழுத்தின் அளவு:
Suresh-gopi-thanks-to-people

மலையாள சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு தீவிர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் பாஜகவில் சேர்ந்து ராஜ்யசபா எம்பியாக பதவி வகித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார் சுரேஷ்கோபி. ஆனாலும் கேரள மாநிலம் முழுவதும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பாஜகவிற்கும் எதிரான அலை வீசியதால் அறுதிப்பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது.

இதனால் வெற்றி பெறுவார் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ்கோபி தோல்வியை தழுவினார். இருப்பினும் தனது வெற்றிக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கும் தனக்கு இந்த அளவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் பிரச்சாரத்தின்போது தனக்கு உணவு வழங்கி உபசரித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சுரேஷ்கோபி.

கேரளாவை பொறுத்தவரை சினிமாவையும் அரசியலையும் அங்குள்ள மக்கள் பிரித்தே பார்ப்பார்கள்.. ஆனாலும் கடந்த முறை நடிகர் முகேஷ், நடிகர் கணேஷ் குமார் ஆகியோரை எம்எல்ஏக்கள் ஆகவும், நடிகர் இன்னசென்ட்டை எம்பி ஆகவும் தேர்ந்தெடுத்த கேரள மக்கள், இந்த முறை சபரிமலை விவகாரம் காரணமாக வேறுவழியின்றி நடிகர் சுரேஷ்கோபிக்கு தோல்வியை பரிசாக அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு முக்கியத்துவம் கொடுக்கும் பீட்டர் ஹெய்ன்திலீப் - அர்ஜுனுக்கு சமஅளவு ... மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல் மோதலால் சமந்தா படத்துக்கு சிக்கல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27 மே, 2019 - 00:38 Report Abuse
Pugazh V நல்ல வேளை..மோகன்லால் தப்பிச்சார். அவரையும் பாஜக அமுக்கி போடப் பார்த்தது.
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
27 மே, 2019 - 00:37 Report Abuse
Pugazh V சபரிமலை விவகாரத்தால் இடதுசாரி காலி என்று ஒரு கட்டுரை போட்டிருந்தார்கள். ஆனால் இதில், " சபரிமலை விவகாரம் காரணமாக வேறுவழியின்றி நடிகர் சுரேஷ்கோபிக்கு தோல்வியை பரிசாக அளித்து உள்ளனர்" என்று போட்டிருக்கிறார்களே... எது சரி ??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in