Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷங்கர் 25 கொண்டாட்டம்

21 ஏப், 2019 - 20:11 IST
எழுத்தின் அளவு:
Shankar-25-years-celebration

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்தவர் ஷங்கர். கும்பகோணத்தில் பிறந்து நடிகராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் கண்ணில் பட்டு, அவரிடம் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அதன்பின்னர் காதலன், இந்தியன், முதல்வன், சிவாஜி போன்ற பல பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து வியக்க வைத்தார். ஷங்கரின் கற்பனை திறன் அளப்பரியது. ஹாலிவுட் இயக்குநர்களுக்கு நிகராக யோசிக்க கூடியவர். அதற்கு அவர் இயக்கிய எந்திரன், 2.0 படங்கள் சாட்சி.

ஷங்கர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்த வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லீ போன்றவர்கள் கடந்தாண்டு கொண்டாடினர். இந்நிலையில் இயக்குநர் மிஷ்கின் அலுவலகத்தில் இன்று(ஏப்.,21), ஷங்கர் 25 ஆண்டு திரையுலக பயணத்தின் கொண்டாட்டம் நடந்தது.

இதில் இயக்குநர்கள் மணிரத்னம், கவுதம் மேனன், வசந்தபாலன், லிங்குசாமி, சசி, பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், அட்லீ, பாண்டிராஜ், மோகன்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அமோக முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - எண்ட்கேம்'அமோக முன்பதிவில் 'அவெஞ்சர்ஸ் - ... தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 ஏப், 2019 - 18:48 Report Abuse
Vasudevan Srinivasan பிரம்மாண்டம் மட்டுமே இவரது இலக்காக இல்லாமல் சாதாரணமான மீடியம் மற்றும் மினிமம் பட்ஜெட்டிலும் படமெடுத்து தான் (திரு. ஷங்கர்) அவர்கள் ஆல்ரவுண்டர் என்று நிரூபிக்க வேண்டும்.. நிரூபிக்க முடியும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in