Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : அதிரடி காட்டும் காப்பான் டீசர்

14 ஏப், 2019 - 20:37 IST
எழுத்தின் அளவு:
Kaappaan-Movie-Teaser-Out

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா - கேவி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமன் இராணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன்லால் பிரதமராகவும், சூர்யா பாதுகாவலாராகவும் நடித்துள்ளனர். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீசர் வௌியாகி உள்ளது. 1.33 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் சூர்யா பலவிதமான ரோல்களில் வருகிறார். விவசாயத்திற்கு குரல் கொடுப்பவர் போன்றும், பயங்கரவாதி போன்றும் சித்தரிக்கப்படுகிறார். அதோடு உளவாளி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரி போன்று வரும் காட்சிகளும் டீசரில் இடம் பெற்றுள்ளன.

விவசாயம், கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் இந்த டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்களும் இந்தப்படத்தில் பேசப்படும் என தெரிகிறது. டீசர் வௌியான 1மணிநேரத்தில் 5லட்சம் பார்வைகளை கடந்தது.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
ஜே.கே.ரித்திஷ் மரணம் : திரை பிரபலங்கள் இரங்கல்ஜே.கே.ரித்திஷ் மரணம் : திரை ... ஷீரடி சாய்பாபா பாடலுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஷீரடி சாய்பாபா பாடலுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

இந்தியன் kumar - chennai,இந்தியா
15 ஏப், 2019 - 17:21 Report Abuse
இந்தியன் kumar விவசாயமும், தொழிலும் நாட்டின் இரு கண்கள், இரண்டும் பாதி பாதி வேண்டும்.
Rate this:
nicolethomson - bengalooru,இந்தியா
15 ஏப், 2019 - 08:28 Report Abuse
 nicolethomson விவசாயம் இவர்களையும் வாழ வைக்குது
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15 ஏப், 2019 - 08:20 Report Abuse
Nallavan Nallavan மோதி வெச்ச ஆப்பு அம்புட்டு ஆழமா இறங்கியிருக்கு ....... அதான் எரிச்சல் இன்னும் தீரலை .......
Rate this:
jagan - Chennai,இந்தியா
15 ஏப், 2019 - 00:59 Report Abuse
jagan ரொம்ப மட்ட ரக மாக உள்ளது. கம்பெனிகளை எதிர்க்கும் படம் தோல்வியடைய வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in