800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
2019ம் ஆண்டின் முதல் காலாண்டு நாளையுடன் முடிவடகிறது. இதுவரையில் வெளிவந்துள்ள படங்களின் எண்ணிக்கை 50ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் 10ம் தேதி 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி போட்டியிட்டதைப் போல, இந்த வாரத்தில் வெளிவந்த 'ஐரா, சூப்பர் டீலக்ஸ்' ஆகிய இரண்டு படங்களும் போட்டி போட்டு களத்தில் இறங்கின.
இதில் நயன்தாரா நடித்த 'ஐரா' படத்திற்கு விமர்சனங்களும் நல்லவிதமாக அமையவில்லை. படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக அமைந்துள்ளது என்றும், சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் படத்திற்கு ஆதரவு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். மற்ற தியேட்டர்களில் படத்திற்கு பெரிய ஆதரவில்லையாம். இந்த மாதிரியான ஒரு கதையை நயன்தாரா எப்படி தேர்ந்தெடுத்தார் என்றே பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.
விஜய் சேதுபதி நடித்துள்ள 'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்கு பெரும்பாலான விமர்சனங்கள் படத்தைப் பாராட்டியே வந்துள்ளன. ஆனால், சிலர் படத்தில் உள்ள மிக மோசமான கெட்ட வார்த்தைகள், பள்ளிச் சிறுவர்களின் நீலப்படம் பார்ப்பதை மையப்படுத்திய அவர்களின் கதை அத்தியாயம் ஆகியவற்றை கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவ்வளவு வெளிப்படையாக அவற்றைக் காட்டியிருக்க வேண்டியதில்லை என்ற கருத்து பரவலாக நிரவுகிறது.
'ஐரா' படத்துடன் ஒப்பிடும் போது இந்தப் படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களிலும், பல முக்கியமான தியேட்டர்களிலும் முன்பதிவு சிறப்பாக உள்ளது என்கிறார்கள். ஆனால், பி அன்ட் சி சென்டர்களில் ரசிகர்களுக்குப் படம் புரியவில்லை என்ற தகவலும் உள்ளது.
'ஐரா' கமர்ஷியல் ரீதியாக தோல்வியைச் சந்திக்கும், 'சூப்பர் டீலக்ஸ்' விமர்சன ரீதியாக வெற்றியைச் சந்திக்கும் என்பதே இன்றைய நிலவரம். இவற்றின் உண்மையான வசூல் நிலவரம் பின்னர்தான் தெரியவரும்.