Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைப்பு வைக்க கட்டுப்பாடு வருமா?

15 பிப், 2019 - 17:34 IST
எழுத்தின் அளவு:
Did-title-will-restrict

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் வித்தியாசமான தலைப்பு என்று சொல்லப்பட்டு வெளிவந்த சில திரைப்படங்கள். ஏண்டா தலையில எண்ண வெக்கல, இருட்டு அறையில் முரட்டு குத்து, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு. அந்தப் படங்களில் ஏண்டா தலையில எண்ண வெக்கல என்ற படத்தில் நாயகனாக நடித்த டிவி தொகுப்பாளர் அசார் தான், நேற்று சர்ச்சைக்குள்னான கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்திலும் நாயகனாக நடிக்கிறார்.

நேற்று அந்தப் படம் தொடர்பான ஒரு விளம்பர போஸ்டர் சர்ச்சையை எழுப்பியது. அந்தப்பட முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையல், அதை வெளியிட மாட்டேன் என மறுப்பு தெரிவித்து தன் இமேஜை விஜய் சேதுபதி காப்பாற்றிக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் திரைப்படங்களுக்கு இப்படிப்பட்ட பெயர்களை வைப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. படத் தலைப்புகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், பிலிம் சேம்பர், கில்டு ஆகிய மூன்று அமைப்புகளில்தான் பதிவு செய்யப்படுகின்றன. இப்படி ஆபாசமான தலைப்புகளை பதிவு செய்ய வருபவர்களுக்கு அதற்கான அனுமதியை அவர்கள் வழங்கக் கூடாது என பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்புதான் ஓவியா நடித்து வெளிவர உள்ள 90 எம்எல் என்ற பட டிரைலர் ஆபாசமாக இருப்பதாக சர்ச்சையை எழுப்பியது. அந்தப் படத்திற்கு குடிப்பதை ஞாபகப்படுத்தும் வகையில் 90 எம்எல் என வைக்கப்பட்டிருப்பதை சென்சார் எப்படி அனுமதிக்கலாம் என்றும் கேட்கிறார்கள். குடிக்கும் காட்சி வந்தாலே அதற்கு எச்சரிக்கை வாசகங்கள் படத்தில் இடம் பெற வேண்டும் என்று சட்டம் வந்திருக்கும் போது, இப்படிப்பட்ட பெயர்களும் எதிர்காலத்தில் வராமல் இருக்க ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா கண்டனம்கோழைத்தனமான தாக்குதல் : சூர்யா ... ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம் ஹாலிவுட் படத்திற்கு முருகதாஸ் வசனம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

makkal neethi - sel,இந்தியா
16 பிப், 2019 - 00:34 Report Abuse
makkal neethi பட தலைப்பே கேள்வி கேக்கும் மக்கள் அனைத்திற்கும் உதவியாக இருக்கும் அரசாங்கத்தை கேள்வி கேட்காததேனோ ..மதுக்கடை அரசாங்கம் தான் நடத்துகிறது ...ரெட் லைட் ஏரியாக்கு லைசென்ஸ் அரசாங்கம்தான் கொடுக்கிறது
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
15 பிப், 2019 - 17:43 Report Abuse
Vasudevan Srinivasan .. தயாரிப்பாளர் சங்கத்தில் தலைப்பை பதிவு செய்யும்போதே இவற்றியெல்லாம் அனுமதிக்கக்கூடாது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in