Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிப்ஸி ரிலீசானதும் மற்ற நடிகர்கள் என் மீது பொறாமை படுவார்கள் : ஜீவா

24 ஜன, 2019 - 10:31 IST
எழுத்தின் அளவு:
After-Gypsy-release-other-actors-will-Jealous-with-me-says-Jiiva

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கி உள்ள படம் ஜிப்ஸி. ஜீவா, நடாஷா சிங், சன்னி வேயன், லால்ஜோஸ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராணயன் இசை அமைத்துள்ளார். வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ அம்பேத்குமார் தயாரித்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு ஜீவா பேசியதாவது:

ஒரு நாட்டுப்புற பாடகர், இந்தியா முழுவதும் சுற்றித்திரிகிறார். அவருக்கு கிடைத்த அனுபவங்களுக்கு பிறகு அவர் புரட்சிகரமான பாடகராக மாறுகிறார். அவர் ஏன் அப்படி மாறுகிறார் என்றால் அதன் பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது. இந்த படத்தின் கதையை ஒன்லைனாக இயக்குநர் ராஜு முருகன் என்னிடம் சொல்லும் போதே, எனக்கு பிடித்திருந்தது. அதிலும் என்னுடைய கேரக்டர் ஆச்சரியப்படுத்தியது.

மனிதநேயத்தை மதிக்க வேண்டும், இயற்கையை கொண்டாட வேண்டும் என்பதை உரக்கச் சொல்லும் கதை. இந்தியா முழுவதும் பயணிக்கும் போது தான் இந்தியா எவ்வளவு அழகானது என்பதையும் இந்த படம் உணர்த்தும். எல்லா மனிதர்களின் உணர்வுகளும் ஒன்று தான் என்பதை அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

படம் முழுவதும் என்னுடன் ஒரு குதிரை நடித்திருக்கிறது. இந்த படத்திற்காக வித்தியாசமான தோற்றம் ஒன்றையும் இயக்குநர் உருவாக்கியிருந்தார். இது போன்ற ஒரு கதையை சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயமாக எடுத்திருக்க மாட்டோம். இதனை துணிந்து எடுத்த தயாரிப்பாளர் அம்பேத் குமாருக்கு நன்றி. கற்றது தமிழ், ஈ போன்ற படங்களில் ஏன் நடிப்பதில்லை? என்று என்னை கேட்ட போது, இந்த கதையை கேட்டதால் இந்த கதையின் மீது நம்பிக்கை வந்தது.

நாகூர், வாரணாசி, ஜோத்பூர், காஷ்மீர் என இந்திய முழுவதிற்கும் பயணித்து படமாக்கினோம். இந்த படம் வெளியான பிறகு ஜீவா ஒரு லக்கியான நடிகர் என்று மற்ற நடிகர்கள் பாராட்டுவார்கள், பொறாமைப்படுவார்கள். இந்த படம் வெற்றிப்படமாக மட்டும் இல்லாமல் என்னுடைய கலையுலக பயணத்தில் முக்கியமான படமாகவும் இருக்கும்.

இவ்வாறு ஜீவா பேசினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விருதுகளை குவித்த ஒற்றைப் பனை மரம்: தமிழ்நாட்டில் வெளியாகிறதுவிருதுகளை குவித்த ஒற்றைப் பனை மரம்: ... அரசியலை கிண்டல் செய்யும் ஆளில்லாத ஊர்ல எம்.எல்.ஏ அரசியலை கிண்டல் செய்யும் ஆளில்லாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

25 ஜன, 2019 - 08:12 Report Abuse
Arul Krish he is a waste guy
Rate this:
Padikkadha Medhai - Trichy,இந்தியா
25 ஜன, 2019 - 06:12 Report Abuse
Padikkadha Medhai ராஜு முருகன் நல்ல இயக்குனராக இருந்தாலும், அவர் படங்களில் கம்யூனிச வாடை/நெடி/நாற்றம் சகிக்கவில்லை.
Rate this:
sankar - Nellai,இந்தியா
24 ஜன, 2019 - 13:55 Report Abuse
sankar waste
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in