Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிவியில் ஒளிபரப்பான பிறகும் 100ஐத் தொட்ட 96

11 ஜன, 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
96-reached-100days

2018ம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படங்களில் பலரின் மனதையும் கவர்ந்த ஒரே படமாக '96' இருந்தது. அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் கோவிந்த் வசந்தா இசையமைப்பில், விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் அக்டோபர் 4, 2018 அன்று வெளியானது.

படம் வெளியாகி ஒரு மாதமே கடந்த நிலையில் நவம்பர் 6ம் தேதி தீபாவளியை முன்னிட்டு இந்தப் படம் டிவியில் ஒளிபரப்பானது. படத்தில் நடித்த த்ரிஷா கூட “5வது வாரத்தில் இருக்கிறோம். இப்போது 80 சதவீதம் மக்கள் தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். இவ்வளவு சீக்கிரத்தில் 96 படத்தை டிவியில் ஒளிபரப்புது நியாயமில்லை. படத்தை பொங்கலுக்கு தள்ளி வையுங்கள்,” என்று கூட கேட்டுக் கொண்டார். படத்தின் இயக்குனரும் அதே கோரிக்கையை வைத்திருந்தார். ஆனாலும், அவர்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் தீபாவளியன்று படத்தை ஒளிபரப்பினார்கள்.

படம் டிவியில் ஒளிபரப்பான பின்னும் தியேட்டருக்கு வந்து ரசிகர்கள் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அது சில நாட்களோடு நின்றுவிடவில்லை. டிவியில் ஒளிபரப்பாகி இன்றுடன் 66 நாட்களாகிறது. '96' படம் அதன் பட வெளியியீடிலிருந்து இன்று 100 வது நாளைத் தொடுகிறது.

ஒரு படம் டிவியில் ஒளிபரப்பான பின் 66 நாட்களைக் கடந்து 100வது நாளைத் தொடுவது தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்தப் பெருமை '96' படத்திற்குக் கிடைத்திருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எல்லா புகழும் ரஜினிக்கே : கார்த்திக் சுப்பராஜ்எல்லா புகழும் ரஜினிக்கே : கார்த்திக் ... தமிழ்நாடு முதல் நாள் வசூல், 'விஸ்வாசம்' டாப் ? தமிழ்நாடு முதல் நாள் வசூல், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 ஜன, 2019 - 14:14 Report Abuse
Vasudevan Srinivasan இப்படித்தான் சுப்ரீம் ஹீரோ சரத்குமார் அவர்கள் நடித்து சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரித்து திரு. கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் 1994 தீபாவளிக்கு வெளியான 'நாட்டாமை' சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை அநியாயமாக ஆங்கில புத்தாண்டன்று 'ஜேஜே' டிவியில் ஒளிபரப்பினார்கள்.. ஆனால் அதையும் தாண்டி பெரு வெற்றி பெற்றது 'நாட்டாமை'..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in