ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து இறந்ததை தொடர்ந்து மும்பை போலீசாரும், அதன்பின் சிபிஐயும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் பிரியங்கா சிங் மற்றும் மீட்டு சிங் இருவர் மீதும் எப்ஐஆர் பதிந்தது தங்கள் கடமை என மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர் மும்பை போலீஸார்.
சுஷாந்துக்கு ஏற்பட்டிருந்த மன அழுத்தம் காரணமாக, அவர் நிவாரணி மாத்திரைகள் கேட்டார் என்பதற்காக, ஒரு மனநல மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், தனக்கு தெரிந்த ஒரு மகப்பேறு மருத்துவரான குமார் என்பவர் மூலமாக சில மருந்துகளை சுஷாந்த்துக்கு வாங்கி கொடுத்திருக்கிறார் சுஷாந்தின் தங்கையான பிரியங்கா சிங்.
இதுகுறித்து ஒரு குற்றச்சாட்டை பிரியங்கா சிங் மீது வைத்த சுஷாந்தின் காதலி ரியா, மருத்துவ விதிகளுக்கு புறம்பாக வாங்கப்பட்ட இந்த மாத்திரைகள், தொடர்ந்து கொடுக்கப்பட்டு, அதன்பின் தான் சுஷாந்தின் மரணமும் நிகழ்ந்துள்ளது என கூறி, தான் கைது செய்யப்படுவதற்கு முதல்நாள் மும்பை போலீஸில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சுஷாந்தின் தங்கைகள் உள்ளிட்ட மூவர் மீதும் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சுஷாந்த் சிங் சகோதரிகள் மீதான வழக்கை டிஸ்மிஸ் செய்யும்படி பரிந்துரைத்தது... ஆனால் அதை மறுத்துள்ள மும்பை போலீஸார், “போலியான மருந்துச்சீட்டு மூலம் சுஷாந்த் சிங்கிற்கு பெற்றுத்தரப்பட்ட மாத்திரைகள், அவரது மரணத்தில் பங்களிப்பு செய்திருக்கிலாம் என்பதால் சுஷாந்த் சிங் சகோதரிகள் மீது வழக்கு பதிவு செய்தது எங்கள் கடமை” என மும்பை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளனர்.