Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆலியா பட் அணியும் மாஸ்க் விலை என்ன தெரியுமா?

01 ஆக, 2020 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Did-you-know-Alia-Bhatts-Mask-price

திரை உலகைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே விலை உயர்ந்ததாகத் தான் இருக்கும் என்ற பிம்பம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அது உண்மையில்லை. சிலர் கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ள போதும் எளிமையாகத்தான் வாழ்ந்து வருகின்றனர்.

அதற்கு பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் நல்ல உதாரணம். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக, கோடிக்கணக்கில் சம்பளம் பெறும் நடிகையாக இருந்தாலும், குறைந்த விலை மாஸ்க்கை அணிந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் ஆலியா.

சமீபத்தில் அவர் வெளியே வந்தபோது எளிமையான உடை, கையில் வாட்டர் பாட்டில் மற்றும் மாஸ்க், கிளவுஸ் அணிந்து இருந்தார். அவர் அணிந்திருந்த மாஸ்க் விலைதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

எளிமை மற்றும் பாதுகாப்பை கணக்கில் கொண்டு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ள, அதே சமயம் எளியவர்களும் பயன்படுத்தும் வகையிலான விலையில் உள்ள மாஸ்க்கை ஆலியா பயன்படுத்தி வருவதாக ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். அவர் பயன்படுத்தும் மாஸ்க்கின் விலை 300 ரூபாய் எனக் கூறப்படுகிறது.

மாஸ்க் அணிவது என்பது தங்களுடைய வசதியை வெளிக்காட்டுவதற்கோ அல்லது ஆடம்பரத்திற்காகவோ அல்ல. பாதுகாப்பு காரணத்துக்காகவே மாஸ்க் அணிகிறோம். இதை விடுத்து சிலர் தங்கம், வெள்ளி கொண்டு மாஸ்க் செய்து ஆடம்பரத்தை வெளிக் காட்டும் விதமாக நடப்பவர்கள் ஆல்யாவைப் பார்த்து கற்றுக் கொண்டால் நல்லது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த்-ரியா பற்றி சேகர் சுமன் கூறும் ஆச்சர்ய தகவல்சுஷாந்த்-ரியா பற்றி சேகர் சுமன் ... ஹெலன் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் ஹெலன் இந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

sri - trichy,இந்தியா
04 ஆக, 2020 - 10:14 Report Abuse
sri யாரு இதை எழுதினாரோ அவரு அம்பானி குடும்பத்தவரா இருப்பார்னு நினைக்கிறன் . 300 ரூபா அவருக்கு சாலிசா தெரியுது . தம்பி நாங்கல்லாம் இங்க கர்ச்சீப் கட்டிக்கிட்டு திரியாறோம் தெரியுமா. 300 ரூபா இருந்தா ஒருவரத்துக்கு அரிசி வாங்கலாம் ,இல்லைனா 2 வாரத்துக்கு காய் வாங்கலாம் .போங்கடா பர்ஸு கொழுத்த பசங்களா
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
03 ஆக, 2020 - 13:28 Report Abuse
 Muruga Vel மாஸ்க் ஒருமையா
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03 ஆக, 2020 - 04:22 Report Abuse
J.V. Iyer யாராவது இலவசமாக கொடுத்திருப்பார்கள்.
Rate this:
Prabhu Balasubramaniam - London,யுனைடெட் கிங்டம்
01 ஆக, 2020 - 22:02 Report Abuse
Prabhu Balasubramaniam Nothing special about this....she wears adidas
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
01 ஆக, 2020 - 19:52 Report Abuse
chakra சினிமாக்காரங்களை பார்த்து பைத்தியக்காரன்தான் நடப்பான்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in