'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது காதலியான நடிகை பவித்ரா கவுடா என்பவருக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தொடர்ந்து ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் செய்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையில் இருக்கும்போது தனது வழக்கறிஞர் மூலமாக பல சலுகைகள் வேண்டும் என அவர் கேட்டதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஆனால் அதே சமயம் மறைமுகமாக அவருக்கு சிறையில் அனைத்து வித வசதிகளும் கிடைத்தன. அது குறித்த வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் பெல்லாரியில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார்.
அவர் இங்கே இருந்த சமயத்தில் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் வில்சன் கார்டன் நாகா என்கிற கேங்ஸ்டர் தான். அதனால் அந்த பகுதியில் எப்போதும் போலீசார் பெரிய அளவில் சோதனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தற்போது கர்நாடக போலீசார் தர்ஷன் இருந்த அந்த சிறைப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்ட போது அங்கே 15 மொபைல்கள், 7 எலக்ட்ரிக் அடுப்புகள், 5 கத்திகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அது மட்டுமல்ல ஆயிரக்கணக்கில் பணமும் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களும் சிக்கின. இவையெல்லாம் தர்ஷன் அங்கிருந்த போது அவருக்காக கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது.