விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி' | காஜல் அகர்வாலின் ‛தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ல் ரிலீஸ் | பெத்தி படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் | அரசன் செட்டுக்கு வந்த பிரியங்கா மோகன் | தெலுங்கிலும் லாபக் கணக்கை ஆரம்பித்த 'கருப்பு' | ‛என் இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு ; முழு பாட்டிற்கும் உரிமை கோர முடியாது : இளையராஜா மனு தள்ளுபடி | அடுத்தடுத்து இந்தியத் திரையுலகத்தை கலக்கிய 'ஆர்ஆர்ஆர்' ஹீரோக்கள் | விஜய் முதல்வரானதும் கடகடவென உயர்ந்த இன்ஸ்டா பாலோயர்கள் | தம்பி பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன சிரஞ்சீவி | சினிமாவில் போக்குவரத்து போலீஸ், நிஜத்தில் போக்குவரத்து அமைச்சர் |

ரஜினிகாந்த் நடிப்பில் ‛கூலி' திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் டைரக்சனில் ‛ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு வரை கேரள தமிழக எல்லையில் பொள்ளாச்சி அருகே இருக்கும் அட்டப்பாடி பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான தேவன், ரஜினிகாந்தை ஜெயிலர் 2 படப்பிடிப்பில் சந்தித்து பேசியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1995ல் ரஜினிகாந்த் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‛பாட்ஷா' படம் வெளியான போது அதில் ரஜினிகாந்த், ரகுவரன், ஆனந்தராஜ் ஆகியோருக்கு அடுத்தபடியாக பேசப்பட்ட கேசவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தேவன். அந்த படம் அவருக்கு தென்னிந்திய அளவில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இடையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் ரஜினியும், நானும் எவ்வாறு நெருங்கி பழகினோம் என்றும் ரஜினியின் முதல் காதல் பற்றியும் கூட தேவன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்துள்ளார் தேவன்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கேரளாவிற்கு சென்று கொண்டிருந்தபோது அட்டப்பாடி பகுதியில் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெறுவதாக கேள்விப்பட்டு அவரை பார்த்துவிட்டு போகலாம் என எந்த முன்னறிவிப்பு இன்றி தான் அங்கே சென்றேன். படப்பிடிப்பில் இருந்த ஒரு உதவியாளரிடம் என்னுடைய பெயரை சொல்லி ரஜினியை பார்க்கலாமா என்று அனுமதி கேட்டு விட்டு வரச் சொன்னேன். ஆனால் நான் சொல்லி அனுப்பிய நபர் வருவதற்குள்ளாகவே இன்னொரு நபரை விட்டு என்னை அழைத்து வரச் செய்தார் ரஜினிகாந்த். என்னை தூரத்திலிருந்து அவர் பார்த்து விட்டார். நான் அருகில் வந்ததும் என்னை கட்டித் தழுவி எப்படி இருக்கிறீர்கள் என விசாரித்தார். பாட்ஷா படப்பிடிப்பில் அவரை முதன்முறையாக பார்த்தபோது எப்படி அன்பை வெளிபடுத்தினாரோ அதே அன்பை இப்போதும் பார்க்க முடிந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை அவரிடம் பேசிக் கொண்டிருந்த விட்டு விடைபெற்றேன்” என்று கூறியுள்ளார் நடிகர் தேவன்.




