'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
முன்னணி மலையாள நடிகர் நிவின் பாலி 'மகாவீர்யர்' என்ற படத்தை தயாரித்து, நடித்தார். 2022ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை எப்ரிட் ஷைன் இயக்கினார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஷம்நாஸ் என்பவர் நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோருக்கு எதிராக வைக்கம் நீதிமன்றத்தில் பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் "ஆக்ஷன் ஹீரோ பைஜூ' என்ற படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக நான் 1.90 கோடி பணம் கொடுத்தேன். ஆனால் எனக்குத் தெரியாமல் படத்தின் உரிமையை நிவின் பாலியும், டைரக்டர் எப்ரிட் ஷைனும் சேர்ந்து வேறு ஒருவருக்கு 5 கோடிக்கு விற்று விட்டனர். எனவே இது தொடர்பாக இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகர் நிவின் பாலி மற்றும் டைரக்டர் எப்ரிட் ஷைன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய தலயோலப்பரம்பு போலீசுக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
"தனக்கு எதிரான புகாரில் எந்த உண்மையும் இல்லை என்றும், வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றும்" நடிகர் நிவின் பாலி கூறியுள்ளார்.