மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! | நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' |

தமிழில் வெளியான 'டிராகன்' படத்தில் கதாநாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை கயாடு லோஹர். ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது நான்கு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மலையாளத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கயாடு லோஹர். இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்குகிறார்.
இந்த நிலையில் தற்போது பள்ளிச்சட்டம்பி படத்தில் தனக்கான காட்சிகளை நிறைவு செய்துள்ளார் கயாடு லோஹர். இது குறித்த தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் 'இந்த கதைக்கு இதயம் போன்றவர் கயாடு லோஹர். இந்த பயணத்தை மறக்க முடியாதபடி செய்துவிட்டார்' என்றும் கூறியுள்ளார்.




