சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கடந்த 1992ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணாமலைக்கு முன்பு, பின்பு என பிரிக்கலாம் என்கிற அளவிற்கு இந்த படத்தின் வெற்றி அமைந்தது. தேவா இசையில் உருவான அனைத்து பாடல்களும் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் ஒலித்து வருகிறது.
தற்போது முதல்முறையாக கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு அண்ணாமலை படத்தை 4K தரத்தில் தமிழ்நாடு,கேரளா மற்றும் வெளிநாடுகளில் வருகின்ற டிசம்பர் 12, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்வதாக இன்று அறிவித்துள்ளனர். அண்ணாமலை படம் ரீ ரிலீஸில் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தும் என விநியோகஸ்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.