மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

பாலிவுட்டில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛ஹேரா பெரி'. மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 2001ல் முதல் பாகமும், நீரஜ் ஓரா இயக்கத்தில் 2006ல் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்குவதாக சொல்லப்படுகிறது. அக்ஷய் குமாரே தயாரிக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தான் விலகி உள்ளதாக நடிகர் பரேஷ் ராவல் அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தயாரிப்பாளரான அக்ஷய் குமார். பதிலுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளரான அக்ஷய் குமாருக்கு இது குறித்து விளக்கம் அளித்து பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு அது பற்றிய பரபரப்பு அமுங்கிய நிலையில் தற்போது இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு நடிகர் பரேஷ் ராவல் இந்த படத்தில் நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியிலும் கூட, “நான் சினிமாவில் அரசியலை ஒருபோதும் விரும்பாதவன். தென்னிந்தியாவில் தான் வசிக்கிறேன். கூப்பிடும் போது சென்று நடித்துவிட்டு வருவேன். என்னைப் பற்றி சிறிய சர்ச்சை கூட சினிமாவில் இருக்காது. அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி எல்லோர் மீதும் எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு” என்று கூறியுள்ளார்.
இப்படி பரேஷ் ராவல் திடீரென படத்தை விட்டு விலகியதும் பின்னர் தற்போது படத்தில் இணைந்துள்ளது குறித்தும் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “அக்ஷய் குமார், பரேஷ் ராவல் சுனில் ஷெட்டி மூவருமே தாங்கள் ஒன்றாக இணைந்து விவாதித்ததாகவும், அதன்பிறகு இந்த படத்தில் ஒன்றாக நடிக்க விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். இவர்களது இந்த முடிவில் வேறு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. இந்த மூன்று பேருமே அவர்களாகவே ஒன்று சேர்ந்து பேசி தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.




