பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது அவரது யூடியூப் சேனலில் ஒரு பாட்கேஸ்ட் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் விருதுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அது பைத்தியக்காரத்தனம். நான் தேசிய விருதுகளையும் சேர்த்து தான் கூறுகிறேன். 7 கோடி மக்களுக்கும் சேர்த்து இவர் தான் சிறந்த நடிகர், இதான் சிறந்த படம் சொல்ல இவங்க என்ன மேதாவிகளா?
நீங்கள் சர்வே எடுங்கள், மக்கள் சர்வே தான் முக்கியம். நீங்க 8 பேரு முடிவு செய்வது தான் புல் சிட். எனக்கு விருதுகள் தராததால் இதை நான் கூறவில்லை. நான் விருது வாங்கினாலும், போகும் வழியில் குப்பைத்தொட்டியில் போட்டுவிடுவேன், அது தங்கமாக இருந்தால் அடகு வைத்து அந்தப் பணத்தில் அன்னதானம் செய்வேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.