'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
கடந்த 2012ல் வசந்தபாலன் இயக்கிய 'அரவான்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் மலையாள நடிகை அர்ச்சனா கவி. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் 'ஞானக்கிறுக்கன்' என்கிற படத்தில் மட்டும் இவர் நடித்திருந்தார். மலையாளத்தில் பல படங்களில் நடித்த இவர் கடந்த 2016ல் தனது நீண்ட நாள் நண்பரான அபீஸ் மேத்யூ என்கிற மேடைக் கச்சேரி நடத்தும் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த 2021ல் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்த நிலையில் தற்போது ரிக் வர்கீஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவர்களது திருமண புகைப்படம் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் ஒரு டேட்டிங் ஆப் மூலம் ஒருவருடன் ஒருவர் பழகி திருமணம் செய்து கொண்டார்கள் என்கிற சுவாரசிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த தகவலை அர்ச்சனா கவியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கண்ணூரில் உள்ள எனது இடத்தில் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த சமயத்தில் நான் கொஞ்சம் தனிமையாக உணர்ந்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு ஒரு டேட்டிங் ஆப் அறிமுகமானது. அதில் தான் எனக்கு ரிக் வர்கீஸ் அறிமுகமானார். நட்பாக பேசி பழக ஆரம்பித்த நாங்கள் கொஞ்ச நாட்களிலேயே எங்களது வாழ்க்கையை எப்படி ஒன்றாக அமைத்துக் கொள்வது என்பது பற்றி பேச துவங்கி விட்டோம். நான் அவரிடம் எனது பிரச்னைகள், எனது முன் கதை என அனைத்தையும் கூறினேன். அவர் நல்ல மனிதர். அவருடைய பெற்றோர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்றார்கள்.
தனியாக சந்தித்தபோது அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்று அவர்களது மோசமான பேச்சிலேயே தெரிந்தது. ஆனாலும் அது குறித்து பொருட்படுத்த வேண்டாம், அவர்களை டீல் செய்வது தன்னுடைய பொறுப்பு என என்னை கேட்டுக் கொண்டார் ரிக் வர்கீஸ். தனிமை என்பது மன அழுத்தத்திற்கு கொண்டு சென்று தள்ளிவிடும் என பொதுவாக சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்த தனிமை தான் ரிக் வர்கீஸ் என்கிற நல்ல ஒரு துணையை தேடித் தந்துள்ளது” என்று கூறியுள்ளார்.