இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியான பிறகு பல நடிகைகள் தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு வாய்ப்புகளுக்காக எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க அதே அறிக்கையில் மலையாள திரையுலகில் ஒரு குறிப்பிட்ட சிலர் ஒன்று சேர்ந்து அதிகார மையமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் அதை களைய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கத்திலிருந்து முக்கிய பொறுப்பில் இருக்கும் இயக்குனர் ஆசிக் அபு சங்கத்தின் பல செயல்பாடுகள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று கூறி வெளியேறினார்.
இதேபோல இன்னும் சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தாங்கள் ஒரு அதிகார மையத்தால் ஒடுக்கப்படுவதாக கூறி வந்தனர். இந்த நிலையில் தற்போது மலையாள திரையுலகில் புதிய சங்கம் ஒன்று உருவாவதற்கான அறிகுறி தெரிய ஆரம்பித்துள்ளது. இதற்கான முன்னெடுப்பை இயக்குனர் ஆசிக் அபு, நடிகையும் தயாரிப்பாளருமான ரீமா கலிங்கல், பெங்களூர் டேஸ் இயக்குனர் அஞ்சலி மேனன் உள்ளிட்ட பலர் கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கடந்த 2017ல் நடிகை ஒருவருக்கு அநீதி நிகழ்ந்தபோது பல நடிகைகள் ஒன்று சேர்ந்து சினிமா பெண்கள் நல அமைப்பு என்கிற ஒன்றை உருவாக்கினர். அதேபோல இப்போது புதிதாக உருவாக இருக்கும் சங்கம் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் நலனையும் பாதுகாக்கும் விதமாக ஏற்கனவே இருக்கும் சங்கங்களின் பழமை வாய்ந்த விதிமுறைகளையும் கொள்கைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு இந்த மாடர்ன் சினிமாவுக்கு ஏற்ப புதிய வழிமுறைகளுடன் உருவாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.