2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் ரஜினி நடித்த 'காலா', அஜித் நடித்த 'வலிமை' போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி. இவர் நடிப்பு பயிற்சியாளர் ரச்சித் சிங் என்பவரை காதலித்து வருவதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அது உண்மையா? வதந்தியா? என்று உறுதிப்படுத்தப்படாத செய்தியாகவே இருந்து வந்தது. அது குறித்து ஹூமா குரேஷியும் எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார்.
இந்த நேரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த ராஷ்மிகா மந்தனா நடித்த 'தம்மா' படத்தின் பிரிமியர் மற்றும் ஒரு தீபாவளி விருந்து நிகழ்ச்சியிலும் தனது காதலருடன் கைகோர்த்தபடி கலந்து கொண்டுள்ளார் ஹூமா குரேஷி. அதையடுத்து அந்த நிச்சயதார்த்த செய்தி வதந்தியாக இருக்க வாய்ப்பில்லை. அது உண்மைதான் என்று பாலிவுட் ஊடகங்கள் மீண்டும் பரபரப்பு செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும், ஹீமோ குரேஷியும், ரச்சித் சிங்கும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.