இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழில் 'நெஞ்சிருக்கும் வரை, உன்னைப் போல் ஒருவன், பயணம், என் வழி தனி வழி, அச்சாரம்” உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர் பூனம் கவுர். அவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே தெலுங்கின் முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் சீனிவாஸ் மீது அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தார். அது மட்டுமல்லாது தற்போது ஆந்திர துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் மீதும் குற்றம் சுமத்தி சில பேட்டிகளையும் கொடுத்திருந்தார். இவை ஓரிரு வருடங்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தெலுங்கில் தற்போது நடன இயக்குனர் ஜானி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சமயத்தில் பூனம் கவுர் அவரது எக்ஸ் தளத்தில், “திரிவிக்ரம் சீனிவாஸ் மீதான எனது புகாரை தெலுங்கு நடிகர் சங்கத்தினர் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால் நானும் மற்றும் பலரும் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்க மாட்டோம். நான் அமைதியாகப் புறக்கணிக்கப்பட்டேன். நான் இதைத் தலைவர்களிடமும் தெரிவித்திருந்தேன், ஆனால், எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. திரையுலகத்தில் உள்ள பெரியவர்கள் இயக்குனர் த்ரிவிக்ரமிடம் கேள்வி கேட்குமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு, ஜானி விவகாரம் குறித்து, “குற்றவாளி ஷேக் ஜானியை இனிமேல் மாஸ்டர் என்று அழைக்கக் கூடாது. 'மாஸ்டர்' என்ற வார்த்தைக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்,” என்றும் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.