2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இடைவெளியில் த்ரிவிக்ரம் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
இதற்காக த்ரிவிக்ரம் நடிகர் தனுஷை சந்தித்து அடுத்த படத்திற்கான கதையை கூறியுள்ளார். இப்போது இதன் பேச்சுவார்த்தை முதற்கட்டத்தில் உள்ளது என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




