
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா?
இந்த புதிய நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். இப்போது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் சொன்னது மாதிரி ஏகப்பட்ட பிரச்னைகள். குறிப்பாக, சாடிலைட், ஓடிடி வியாபாரம் இல்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கி கிடக்கிறது. சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது இல்லை. நடிகர், நடிகைகள் சம்பளம், படப்பிடிப்பு செலவு அதிகரித்துவிட்டது. படங்களின் வெற்றி விகிதம் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் புது நிர்வாகம் தயாரிப்பாளர்கள் குறைகளை கேட்டு, விரைவில் அதை சரி செய்து தர வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!