ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

கடந்த 2024ல் தெலுங்கில் புராண கதை அம்சம் கொண்ட 'ஹனுமன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்று 250 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி இருந்தார். கதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'ஜெய் ஹனுமான்' என்கிற பெயரில் உருவாகிறது.
இந்த இரண்டாம் பாகத்தில் பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் துவக்க விழா பூஜை, ஹனுமான் பிறந்த இடம் என கருதப்படும் ஹம்பியில் உள்ள அஞ்சனாத்திரி என்கிற இடத்தில் நடைபெற்றுள்ளது. இதில் படத்தின் ஹீரோ ரிஷப் ஷெட்டிஉள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.




