''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் |

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா ஐயர், வரலட்சுமி சரத்குமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'ஹனு மான்'.
பான் இந்தியா படமாக வெளியாகி 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தின் முடிவிலேயே அதன் அடுத்த பாகமான 'ஜெய் ஹனுமான்' பற்றிய அறிவிப்பும் இருந்தது.
2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் 'காந்தாரா' நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். ஒரு வருடமாகியும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் வேலைகளில் மிகவும் பிஸியாக ரிஷப் இருந்ததால் இந்தத் தாமதம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள்.
தற்போது படத்தை ஆரம்பிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். பிப்ரவரி 22ம் தேதி கர்நாடக மாநிலம் ஹம்பியில் இப்படத்தின் பூஜை நடக்க உள்ளதாம். அதையடுத்து மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த பின் பட வெளியீடு பற்றி அறிவிப்பார்களாம்.