அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
அஜித், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம் நாளை மறுதினம் (ஏப்ரல் 10) வெளியாகிறது. இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளுக்கான முன்பதிவு ஏறக்குறைய அரங்கு நிறைந்த காட்சிகளாக அமைந்து 'குட்' ஆக உள்ளது. அதற்கடுத்து வெள்ளிக்கிழமை 'பேட்' என்று சொல்ல முடியாத அளவிற்கு பாதியளவு அரங்குகள் நிறைந்துள்ளது. அதே சமயம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை நாட்கள் என்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 'குட்' ஆகவே உள்ளது. சுமார் 75 சதவீதம் அளவிற்கு தற்போது முன்பதிவு நடந்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மீதமுள்ளதும் முன்பதிவு செய்யப்பட்டுவிடலாம்.
படம் வெளியாகும் வியாழக்கிழமை முதல் ஞாயிறு வரையில் படத்திற்கான ஓபனிங் சிறப்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார இறுதி வசூலில் எப்படியும் 100 கோடியைக் கடந்துவிடும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். படம் நன்றாக இருந்தால் அடுத்த வார வேலை நாட்களிலும் படத்திற்கு ரசிகர்கள் வர வாய்ப்புள்ளது.
படத்திற்கான பட்ஜெட் 200 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்தால் மட்டுமே படம் லாபம் தரக் கூடியதாக இருக்கும். ஓடிடி, சாட்டிலைட் உரிமை மூலம் 100 கோடி வரை வந்திருக்கலாம். இருந்தாலும் தியேட்டர் வசூல் மட்டுமே முன்னணி நடிகர்களின் மார்க்கெட் நிலவரத்தை உறுதி செய்கிறது.