Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

பெண்களுக்கு மரியாதை தரும் ஆண்களை இப்போது தான் சந்திக்கிறேன்: ஜோதிகா

28 ஜூன், 2019 - 07:29 IST
எழுத்தின் அளவு:
jyothika-talks-about-ratchasi

தமிழ் திரையுலகில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ள, ஜோதிகா நடித்த, ராட்சசி படம், அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. பத்திரிகையாளர் சந்திப்பில், படம் குறித்து அவர் பேசியதாவது:


கதை நாயகியாக நடிப்பது குறித்து?


இந்த படத்தின், தயாரிப்பாளர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்கள், சூர்யா, கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கின்றனர். நான் அவர்களிடம் கேட்டதால், இந்த படத்தை தயாரிக்க சம்மதித்தனர். அவர்களின் பெயரில் வரும் படங்களுக்கு, மிகுந்த மரியாதையும், ரசிகர்களின் அன்பும் உண்டு. அதனால் தான், அறிமுக இயக்குனர் கதை என்றாலும், இந்த பேனரில் நடிக்க சம்மதித்தேன்.


ராட்சசி எந்த மாதிரி படம்?


அரசு பள்ளி குறித்த கதை தான், இந்த படம். இந்த மாதிரி கதைகள் நிறைய வந்தாலும், ராட்சசி படத்தில் இடம் பெற்ற திரைக்கதை ரொம்ப புதுசு. தந்தை, மகள் சம்பந்தப்பட்ட காட்சி உட்பட, நிறைய காட்சிகள் புதிதாக இருக்கும்.


புது இயக்குனர்கள் குறித்து உங்கள் கருத்து?


புது இயக்குனர்கள் பற்றி, ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இவர்கள் கதை சொல்லும் போது, ரொம்ப அழகாக சொல்கின்றனர். எந்த மாதிரி சமூக கருத்தை சொல்ல வேண்டும் என்பதில், தெளிவாக உள்ளனர். அது, இந்த படத்தின் இயக்குனர், கவுதமிடம் இருந்தது.


ராட்சசி படத்தில் கடினமான வார்த்தைகளை உடைய வசனங்கள் இருந்ததா?


நான் வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் என்பதை, வசனகர்த்தா யோசிக்கவே இல்லை. ரொம்ப கஷ்டமான வசனங்கள் இருந்தன. இரண்டு மாதத்திற்கு முன், 'ஸ்கிரிப்ட்'டை தந்து விட்டனர்.


படத்தில் பணியாற்றியவர்கள் குறித்து சொல்லுங்கள்?


இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கோகுல், எனக்காக ரொம்பவே கஷ்டப்பட்டார். அவருடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். இந்த, 'டீம்' சாப்பிட கூட தனியே, நேரம் எடுத்துக் கொண்டது இல்லை. 24 மணி நேரமும் பணியாற்றினர். இவர்களுடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. இப்படத்தின் நாயகன், இசையமைப்பாளர் தான்.


டுவிட்டரில் இருக்கிறீர்களா?


இல்லை. என் கணவரின் டுவிட்டரில் தான் தகவல்களை பார்ப்பேன்.


பூர்ணிமா பாக்யராஜ் உடன் பணியாற்றியது எப்படி இருந்தது?


அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் சிறந்த நடிகை. ஆண்களை காட்டிலும், ஒரு பெண்ணுடன் சேர்ந்து பணியாற்றும் போது அது ஸ்பெஷலாக இருக்கும்.


இரண்டாவது இன்னிங்ஸ் பற்றி...


என் மகளின் பள்ளி ஆண்டு விழா ஒன்றில், சியாமளா என்ற ஆசிரியை கூறியது இது. 'மலையில் ஏறுபவர்கள், மலையின் உச்சிக்கு சென்று விட்டு, மற்றவர்களை கீழே பார்ப்பது வெற்றி கிடையாது. எது முக்கியம் என்றால், அவர் மலையேறும் போது, அந்த பயணம் அழகாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களை அரவணைத்து உதவ வேண்டும்' என்றார். அன்று முதல், நானும் இதை பின்பற்றுகிறேன். தற்போது இரண்டாவதாக மலையேறுகிறேன். இந்த தருணத்தில் தான், அழகான கதைகள் வருகின்றன. அதிலிருந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிறேன். பெண்களுக்கு மரியாதை தரும் ஆண்களை, இந்த பயணத்தில் தான் அதிகமாக சந்திக்கிறேன். பெண், அம்மா, நடிகை என, மூன்று விதமாக உள்ள எனக்கு, இப்போது தான் மகிழ்ச்சியான தருணம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆஸ்திரேலியா டூ கோலிவுட்.... கொலைகாரன் நாயகி ஆஷிமா நார்வால்ஆஸ்திரேலியா டூ கோலிவுட்.... கொலைகாரன் ... அஜித் வாக்கு கொடுத்தார் நடித்து முடித்தார் : போனி கபூர் அஜித் வாக்கு கொடுத்தார் நடித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in