சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

'சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ராதா. தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ராதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை சாலிகிராமத்தில் பக்கத்து வீட்டு வாலிபருடன் ஏற்பட்ட தகராறில் சாலையில் நடந்து சென்ற அவரை தனது மகனுடன் சேர்ந்து தாக்கியதாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அதுபோன்ற ஒரு புகார் இப்போதும் அளிக்கப்பட்டுள்ளது.
அதுபற்றிய விபரம் வருமாறு : சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் எல்.ஐ.சி. ஏஜெண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் ராதாவிடம் 'பிட் காயினில்' பணம் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என கூறியுள்ளார். அதை நம்பிய நடிகை ராதா, 2 வருடங்களுக்கு முன்பு முரளிகிருஷ்ணன் மூலம் 90 ஆயிரம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை முதலீடு செய்ததற்காக எந்த பணமும் தரவில்லை. மேலும் அவர் முதலீடு செய்த பணத்தையும் திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் வடபழனியில் உள்ள தனது நண்பர் அலுவலகத்தில் முரளி கிருஷ்ணன் பேசி கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்து அங்கு வந்த நடிகை ராதா, அவரது தாய் பவானி, மகன் தருண் ஆகியோர், முதலீடு செய்த பணம் குறித்து முரளி கிருஷ்ணனிடம் கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராதா உள்பட 3 பேரும் சேர்ந்து திடீரென முரளி கிருஷ்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளி கிருஷ்ணனின் தலையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி வடபழனி போலீஸ் நிலையத்தில் முரளி கிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.




