ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது |
“நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ்” ஆகிய படங்களில் நடித்தவர் படத்தில் நடித்த நடிகை மெஹ்ரின் பிர்சதா. அவர் தன்னுடைய கரு முட்டையை பாதுகாத்து வைத்துள்ளது பற்றி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
திருமணம் தள்ளிப் போக வாய்ப்புள்ளவர்களோ, அல்லது குழந்தை பெறுவதை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளவர்களோ இப்படி தங்களது கரு முட்டையை சேமித்து வைக்க முடியும்.
“கடந்த இரண்டு வருடங்களாக இது குறித்து யோசித்து வந்ததாகவும், கடைசியாக செய்து முடித்துவிட்டேன். நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள்,” என்றும் இது குறித்து மெஹ்ரின் பதிவிட்டுள்ளார்.