2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமா முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமாருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் அஜித் நடிக்க இருக்கிறார். 'விடாமுயற்சி' படத்திற்கு சற்றே இடைவெளி விடப்பட்டுள்ளது. 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.
இன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதால் இரண்டு படங்களின் அப்டேட்டுகள் ஏதாவது வருமா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பொதுவாக தங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளுக்கு புதுப் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிடுவது வழக்கம்.
அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி' குழுவினர் நிறைவேற்றுவார்களா என்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.