'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

‛8 தோட்டாக்கள்' படத்தை தயாரித்து, அதில் நடித்த வெற்றி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். எல்லா பெரிய ஹீரோக்களை போல அவரும் 'பரீட்' என்ற படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார்.
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் தயாரிக்கும் இந்தப் படத்தை 'வெப்' படத்தை இயக்கிய ஹாரூண் இயக்கியுள்ளார். கதையின் நாயகிகளாக ஐதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, 'லப்பர் பந்து' ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகிறது. படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். கே.வி.கிரண் ஒளிப்பதிவு செய்கிறார்.