''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
முன்னணி ஹிந்தி தொலைக்காட்சி நடிகை கிருஷ்ண முகர்ஜி. கடந்த 10 வருடங்களாக தொலைக்காட்சி துறையில் இருக்கிறார். நாகினி 3 உள்பட பல தொடர்களில் நடித்துள்ளார். ஏராளமான போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். 'சுப் ஷகுன்' தொடரில் நடித்தபோது அதன் தயாரிப்பாளரால் தான் துன்புறுத்தப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
எனது மனதில் இருக்கும் விஷயங்களை பற்றி சொல்ல எனக்கு இத்தனை நாட்கள் தைரியம் வந்தது இல்லை. ஆனால் இன்று நான் அதைத் தடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். நான் கடினமான காலங்களைக் கடந்துதான் வந்திருக்கிறேன். கடந்த ஒன்றரை வருடங்கள் எனக்கு எளிதாக இல்லை. நான் தனிமையில் இருந்தபோது மனச்சோர்வுடனும், கவலையுடனும், மனதுக்குள் அழுதேன். தங்கல் டிவியில் எனது கடைசி நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சியை நான் செய்யத் தொடங்கியபோது இந்த மனச்சோர்வு எனக்குத் தொடங்கியது. அது என் வாழ்வின் மிக மோசமான முடிவு. ஆனால் நான் மற்றவர்களைக் கேட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் என்னைப் பலமுறை துன்புறுத்தியுள்ளனர்.
ஆடைகளை மாற்றும் போது, அவர்கள் ஒருமுறை என்னை என் மேக்கப் அறையில் அடைத்து வைத்தனர். 5 மாதங்களாக இன்றுவரை எனது சம்பளத்தை தரவில்லை. இதற்காக தயாரிப்பு நிறுவனத்திற்கு பலமுறை சென்றும் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. நான் முழுவதும் பாதுகாப்பற்று உடைந்து பயந்துவிட்டேன். இதுதொடர்பாக நான் பலரிடம் உதவி கேட்டேன், ஆனால் எதுவும் நடக்கவில்லை. நான் ஏன் எந்த நிகழ்ச்சியும் செய்யவில்லை என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். இதுதான் காரணம். எனக்கு பயமா இருக்கு. அதே மாதிரி மீண்டும் நடந்தால் என்ன ஆகும்? எனக்கு நீதி வேண்டும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.